காதல் பேசும் பிப்ரவரி: நட்பின்(னை) காதலி

by admin 2
37 views

எழுதியவர்:  சினேகிதா ஜே ஜெயபிரபா

அன்பின் தோழி சினேகிதா நல்லாருக்கு உங்க கவிதைகள் 

 வாசித்த சினேகிதாவால் மற்ற குறுஞ்செய்திகள் போல் இதையும் அழித்துவிட்டு கடந்து செல்ல இயலாததால் யார் எவர் என்று ஏதும் ஆராயாமல் நன்றிகள் சகோ என பதிலளித்தாள்

சிலநிமிடங்களில் சந்திரஹாசனிடமிருந்து பதில் நீங்க நல்லா எழுதறீங்க உங்களை ஒரு கவிதை குரூப்ல சேர்த்து விடட்டுமா இதை எதிர்பார்க்கவில்லை சினேகிதா கண்மூடித்தனமாகத் தான் சேர்த்து வைத்திருக்கும் நண்பர்கள் நான்காயிரத்திற்கும் அதிகமாகவே இருந்தனர்

 ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் நல்லவர் கெட்டவர் என்று பாராமல் அனைத்து நண்பர்களுக்கும் அக்செப்ட் கொடுத்து வைத்திருந்தாள் இப்ப ஒவ்வொன்னா பிளாக் பண்ணவேண்டிய அளவு பலரும் மிக மோசமாகத்தானிருந்தனர்  இதில் சந்திரஹாசன் மட்டும் தனிரகமாய் புது விதமாய் அவளது திறமையை வளர்ப்பதில் அக்கறை  அவள் இதுவரை அறியாத ஒன்று  அவளுக்கு பிடித்திருந்தது இந்த உரையாடல் ஆண்டுகணக்கா செய்தி அனுப்பி பலரும் பதிலுக்காய் காத்திருக்கின்றனர்  பலதை பார்க்கவில்லை சில பார்த்தும் பாராததுவாய் பார்த்த குறுஞ்செய்திகளின் செய்திகள் எல்லாமும் உன்னை பார்க்கணும் உன்னோடு குரல் கேட்கணும் உனக்கு எத்தனை வயசு நீ அழகா இருப்பியா வீடியோ கால் வா இந்த மாதிரி ரகமாகத்தான் இருந்தது அதிலே பல பிளாக்லிஸ்ட் அனுப்புமளவு தரமானதாயிருக்கும் ஆகவே அவளுள் அச்ச உணர்விருந்தாலும்  ஏதோ ஒரு ஒட்டுதலாய் உண்மை அன்புறவினை அவனில் உணர்த்தியது அவளின் உள்மனம் சந்திரஹாசனின் ஒவ்வொரு நாள் உரையாடலுமே அவள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டதாய் இருந்தது தாய்மையாய் தந்தைமையாய் இறைமையின் நிறைமையாய் தோழமையின் தூயமையை உணர்ந்ததாலே உரையாடல் வழி உறவு வளர்ந்து உயிருறவாகி உயருன்னத நிலை நோக்கி நகர்ந்தது நல்லுறவாகவே அவனது விருப்பப்படி குழுவில் இணைந்து கவிதைகள் எழுத தொடங்கினாள் சினேகிதா 

காகிதமாய் குப்பையாகிப் போகவிருந்த கவி வரிகளுக்கு மதிப்பு கிடைத்தது தோழன் இவனால்  கவி வரிகளை வாசித்தவன் வரிகளுக்குள் ஊடுருவி உள் மனதையும் சேர்த்து வாசித்தான் வலி நிறைந்த வரிகளை உணர்ந்தவன் வலி போக்க விழைந்தான்

நம்மளோட பிரண்ட்ஷிப்ல ரெண்டு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ ஒன்னு உனக்கு எந்த விதமான கஷ்டமா இருந்தாலும் என்கிட்ட சொல்லு நான் இருக்கும் வரை உன்னோட கஷ்டத்தை போக்குவேன் இன்னொன்னு எந்த காரணத்தை கொண்டும் நீ எழுதுறத நிப்பாட்ட கூடாது நீ எப்ப எழுதறத நிப்பாட்டுறியோ அப்ப நீ என்னை வெறுக்கிற நம்ம நட்பை விட்டு விலகி போறனு நினைச்சுக்க என்று கூறினான் சந்திரஹாசன்

அதென்ன நான் இருக்கும் வரை  விட்டுட்டு போயிடுவியா என்று பதில் செய்தி அனுப்பினாள் எப்ப என்ன நடக்கும்னு சொல்ல முடியாது நான் எப்பவும் உன்னுடனே இருக்கவும் முடியாது நான் உனக்கு வழிகாட்டியா தான் வந்து இருக்கிறேன் வழித்துணை கிடையாது  எனக்குன்னு ஒரு குடும்பம் வரலாம் 

உனக்கு ஒரு குடும்பம் இருக்கு அதை மீறி நாம் இரண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நடக்க முடியுமா தெரியவில்லை நான் விலகிச் சென்றாலும் அதை நீ ஏத்துக்கணும் ஆனா நீ எழுதுறது மட்டும் நிப்பாட்டிடாத  எழுத்துல நீ பெரிய ஆளா வரணும் பெருசா சாதிக்கணும் 

அதுதான் நம்ம நட்புக்கு நீ கொடுக்கிற மரியாதை என்று செய்தி அனுப்பினான் இது சினேகிதாவின் மனதில் மேலும் வலிகளைத் தான் ஏற்படுத்தியது அவளால் உறவு பிரிதல் தாங்கிக் கொள்ள இயலாத ஒன்று என்பதை உணர்ந்தான் 

அதைத் தாங்கும் பக்குவம் அளித்திடவே அவளோடு ஒட்டாதவன் போலே நடந்து கொள்ள தொடங்கினான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினான் என்றாலும் சினேகிதா உணரவே செய்திடுவாள் அவன் உள் மனதுக்குள் அவள் மேல் எத்துனை அன்பும் அக்கறையும் இருக்கிறது என்பதனை அவள் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ச்சியில் முன் செல்ல தடையாகிடக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டு அவளை விட்டு சிறிது சிறிதாக விலகிச் சென்றான்

இது சினேகிதாவால் ஏற்றுக் கொள்ளவே முடியாதென்றாலும் அவன் பேசினாலும் பேசாதிருந்தாலும் மௌன பாசையிலும் அன்பை முழுதாய் உணர்வதால் அப்படியே ஏற்றுக் கொண்டாள் 

ஒவ்வொரு நொடியும் இடைவெளிக்காய் மிகுந்த வலி அனுபவித்தாலும் நினைவுகளில் நிறைந்துள்ள அவனது வார்த்தைகள் அவனது அருகாமையை உணர்த்தியது அவள் கவியின் காதலனாம் வரிகளை ரசித்த எழுத்தினன் அவனை அவள் எழுத்துக்களாலே மரியாதை செய்ய முயன்றவள் 

இன்னும் இன்னும் அதிக குழுக்களில் இணைந்து எழுத தொடங்கினாள் எங்கெல்லாம் எழுத வாய்ப்பு கிடைத்ததோ அங்கெல்லாம் அவனுக்காகவே எழுதினாள் எழுதிய எழுத்துக்களை அவனது வாட்சப் பக்கத்தில் பதிவிடுவாள் கிடைத்த சான்றிதழ்களையும் அதிலே பதிவிடுவாள் அவன் பார்க்காது போனாலும் பதில் அளிக்காது போனாலும் அவன் பார்ப்பதாகவும் அவளோடு உறவாடுவதாகவும் அவளுக்குள் உணர்ந்து கொண்டாள் இது போதாது இன்னும் அதிகமா ஏதாவது சாதிக்கணும் என்ற விதையை அவளுக்குள் அவன் விதைத்து சென்றிருந்தான் 

அது முளைவிட்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்து விருட்சமாகி அதன் விளைவாக தமிழ் எழுத்துக்கள் 247 க்கும் வார்த்தைகளாக்கி கவிதைகள் எழுதிய சினேகிதா உலக சாதனை பெற முயன்று வருகிறாள்

சந்திரஹாசணும் அவளை விட்டு விலகி இருந்தாலும் நொடிதோறும் அவள் வளர்ச்சியில் அக்கரை கொண்டவனாகவே அவள் சாதனைக்காக காத்துக் கொண்டிருக்கிறான் அவர்களது நட்பின் மீது அவர்கள் கொண்ட காதலின் அளவு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது விரைவில் சினேகிதாவின் தமிழ் எழுத்துகளுக்கான கவிதை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுவிடும்  அதற்கு கிடைத்திடும் பரிசுகளோடு சந்திரஹாசனை நேரில் சந்தித்து நட்பின் காணிக்கையாக்கிடுவாள் சினேகிதா அவர்களது நட்பின் காதல் இன்னும் ஆழமாகியே ஆத்மார்த்தமாய் புனிதமடைந்திடும்

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!