காதல் பேசும் பிப்ரவரி: பிஞ்சில் பழுத்தது

by admin 2
17 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

நான் ஒரு ஆசிரியர். ஆசிரியர் என்றால் பள்ளி மற்றும் கல்லூரியில் இல்லை. நான் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டு அதில் முதல் மூன்று நிலைகள் முடித்து விட்டேன். எல்லாம் முதல் வகுப்பு. 

சமஸ்கிருத பாரதி என்று அமைப்பு வருடாவருடம் ஆசிரியர் பயிற்சி முகாம் 15 நாட்களுக்கு நடத்தும்.  4 வருடங்கள் முன் நான் அதில் கலந்து கொண்டேன். வெகு சிறப்பாக நடைபெற்றது. நான் நாடகம் கூட போட்டேன். 

பின்னர் ” சமஸ்கிருதத்தில் 10 நாட்களில் பேச முடியும் ” என்று அமைப்பு பயிற்சி தந்தது. 

எனக்கு முதல் வகுப்பு. அதாவது ஆசிரியராக. தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை இருக்கும். என்னிடம் கற்க 18 பேர் சேர்ந்தார்கள். 10 ஆண்கள் 8 பெண்கள். 

நான் நன்றாகவே சொல்லி கொடுத்தேன். நாளை முடிவு விழா. இன்றுடன் வகுப்பு நிறைவடைகிறது. ஒரு இளம் பெண்… கடைசியாக போகும் போது ஒரு துண்டு காகிதம் கொடுத்தார். 

              அகம் இச்சாமி…! 

               ஆம்  நான் விரும்புகிறேன் என்று தந்து விட்டு சென்றார். 

மறுநாள்… நிறைவு நாள் நன்றாகவே போனது. அந்த இளம் பெண் பதட்டத்தில் இருந்தார். சாந்தி ஸ்லோகம் முடிந்து எல்லோரும் போனார்கள். நான் அந்த பெண்ணை இருக்க சொன்னேன். 

” உனக்கு வயசு எவ்வளவு..? “

” 17 ஜீ…! “

” பார்… உனக்கு காதலிக்கும் நேரம் இன்னும் வரவில்லை. நீ மேஜர் கூட ஆகவில்லை. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி… இந்த வயதில் காதல் கீதல் எல்லாம் கூடவே கூடாது….! “

அவள் முகம் சிவந்தாள். நான் அவளிடம்.. சொன்னேன்.  ” ஆல் தி பெஸ்ட்…! “

        ” தன்யவாதக :” என்று சொல்லி கிளம்பி சென்றார். 

        ஆம் அவர் சொன்னது  நன்றி. 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!