காதல் பேசும் பிப்ரவரி: மண்ணின் மீது மனிதர்க்கு காதல்

by admin 2
35 views

எழுதியவர்: ஹரிஹர சுப்பிரமணியன்

மண்ணின் மீது மனிதர்க்கு காதல் ,
மனிதர் மீது மண்ணுக்கு காதல்

அந்த கிராமத்தின் பெரிய நில கிழார் ஆறுமுகம் , நல்ல உழைப்பாளி . அவரது குழந்தைகள் எல்லாம் நல்ல முறையில் படிக்க வைத்து விட்டார் . நாள் தவறாது ஆறுமுகம் அவரது நிலத்தை மிதிக்காது உணவு உட்கொள்ள மாட்டார் , நிலத்தில் உள்ள மண்ணை முதலில் எடுத்து அதனை திரு நீர் பூசுவது போல பூசி
கொள்வார் . தினமும் நாள் தவறாது அவரது நிலத்தை கும்பிட்டு ஒரு ரவுண்டு போய் விட்டு இளநீர்
பறித்து , வெட்டி குடித்து விட்டு தான் வீடு திரும்புவார் அந்த நிலமும் அவருக்கு நல்ல மகசூலை கொடுத்தது . அந்த கிராமத்தில் உள்ள எல்லோரது நிலத்தை விட ஆறுமுகத்தின் நிலம் நல்ல முறையில்
பார்த்தாலே ஒரு வித பிரமிப்புடன் இருக்கும் .

கால சக்கரம் உருண்டோடட , நாட்களும் பறந்தோட , ஆறுமுகமும் ஒரு நாள் விண்ணுலகத்திற்கு சென்று விட்டார் .அவரது பையன்கள் நிலத்தை கொஞ்ச காலம் போட்டு விட்டார்கள் , எட்டி கூட பார்க்க வர வில்லை . ஒரு நாள் எதோ ஊர் விசேஷத்திற்கு வந்தவர்கள் அப்பாவின் நிலத்தை பார்த்து வர கூடி சென்றார்கள் . மொத்த நிலமும் பொலிவிழந்து , அறிவித்த அருவருக்க தக்க தோற்றத்துடன் இருந்தது
கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள் .

இவர்கள் திகைத்து நின்றதை பார்த்த பக்க்கது நில த்து காரர் ” தம்பி , உங்க அப்பா இருந்த வரை இந்த நிலத்தை கண்ணுக்கு கண்ணாக பார்த்து கொண்டார் , அவர் போனதும் இந்த நிலமும் காதலனை பிரிந்த காதலி போல ஆகி களை இழந்து விட்டது .

நீங்க யாராவது உங்க அப்பாவை போல தினமும் இங்க வந்து நிலத்தை பாருங்க , பூமி தாயை வறுத்த பட வைக்காதீங்க ” என சொன்னதும் ஆறுமுகத்தின் மகன்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

எங்கிருந்தோ ரேடியோ வில் இருந்து பாட்டு சதகம் கேட்டது ” மண்ணின் மீது மனிதர்க்கு காதல் , மனிதர் மீது மண்ணுக்கு காதல் “

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!