காதல் பேசும் பிப்ரவரி: மறுமணம்

by admin 2
41 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

ஊட்டி. குன்னூர் ரோட்டில் ஒரு மிகப்பெரிய ஹோட்டல் இருந்தது. அது 5 நட்சத்திர ஹோட்டல். திறந்து 2 வருடங்கள் தான் ஆகிறது. 

ஹோட்டல் பெயர் பிரின்ஸ்சஸ் கீழே பய் உள்ளது. இந்த ஹோட்டலில் ஒரு ஸ்பெஷால்ட்டி இருந்தது. ஆம். சர்வர்கள் எல்லாம் இளம் பெண்கள். பாலு தனது மனைவி புற்று நோயால் இறந்த பிறகு அவருக்கு மாலை என்றால் அது பிரின்ஸ்சஸ் ஹோட்டலில் தான். 

தினமும் ஒரே இளம் பெண் தான் சர்வ் செய்வார். பாலு வந்ததும் முதல் ரெளண்ட்.  கூடவே.. சமோசா, உருளை கிழங்கு, நேந்திரம் சிப்ஸ் கொண்டு வருவார். இப்படி 3 ரெளண்ட் முடிந்ததும் கிளம்பி விடுவார். 

ஒரு நாள் அவர் வந்தார். பாலு எனக்கு விஸ்கி வேண்டாம். ஏதாவது ஒரு குளிர் பானம் கொடுங்கள் என்று சொல்லி விட்டு சிகரெட் பற்ற வைத்தார். அவருக்கு தினமும் சர்வ் செய்வது ராணி தான். அவர் குளிர் பானம் மற்றும் ஸ்நாக்ஸ் கொண்டு வந்தார். அவர் அந்த பெண்ணின் பெயரை கேட்டார். 

” ராணி…! ” ” ப்ளீஸ்.. ஒரு 5 நிமிஷம் உக்காருங்கள். கொஞ்சம் பேச வேண்டும்…! ” என்றார் பாலு. ராணி உட்கார்ந்து விட்டார். பாலு அழுது கொண்டே தனது கதையை சொல்லி விட்டு அழுதார் எனக்கு கல்யாணம் செய்து கொள்ள ஆசை. 

நான் உங்களை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு இங்கு என்ன சம்பளம்…? எனக் கேட்க… ” ₹ 10,000″ என்றார். எதற்காக இதை எல்லாம் கேட்கிறீர்கள்..?”. இது ராணி. 

“நான் உங்களை விரும்புகிறேன். உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன். உங்களுக்கு என் கம்ப்யூட்டர் சென்டரில் மேனேஜர் வேலை தருகிறேன். சம்பளம் ₹ 20,000…உங்களுக்கு கல்யாணம் வேண்டாம் என்றாலும் வேலை நிச்சயம்…!”.

” சார்.. நாளை வாங்கள். நான் என் முடிவை சொல்கிறேன்…! “. மறுநாள். மாலை 6 மணி. 

பாலு வந்தார். ராணி பாலுவுக்கு குளிர் பானம் தந்தார். பின்னர் ஒரு பெரிய ரோஜா பூ கொத்து கொடுத்தார். பிறகு சொன்னார்.  ” நான் உங்களை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம்…! ” சொல்லி விட்டு உட்கார்ந்தார். 

       பாலுவிற்கு நிம்மதி. 

       அடுத்த வாரம்

       பாலு-ராணி கல்யாணம்..! 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!