எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
கோவை. ஆர் எஸ். புரம்.
நான் சில ஆண்டுகளாக வசந்தி என்ற பெண்ணை காதலித்து வருகிறேன். தினமும் அவர் கல்லூரி போகும் போது மற்றும் வரும் போதும் சைட் அடிப்பேன்.
அவருக்கு நான் அவரை விரும்புகிறேன் என்று நன்கு தெரியும். ஒரிரு முறை அவர் திரும்பி பார்த்து உள்ளார்.
இன்று எனக்கு பிறந்த நாள். நான் முடிவு செய்து விட்டேன். இன்று அவர் வீட்டிற்கு சென்று அவரை பெண் கேட்பது என..
நான் தைரியத்துடன் போனேன். அவர் அம்மா வந்தார்.. நான் விஷயம் சொன்னேன். அவர் உடனே வசந்திக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று பொய் சொன்னார். டுபாய் மாப்பிள்ளை என்று வாய் கூசாமல் சொன்னார்.
நான் உடனே கிளம்பினேன். எனக்கு வேலை இல்லை. சொத்து எதுவும் இல்லை. கையில் பணம் இல்லை.
யார் தனது பெண்ணை கொடுக்க முன் வருவார்கள்..?
நான் இதை பற்றி எல்லாம் யோசிக்க வில்லை. நான் மனதார அவரை காதலித்தேன்.
உண்மை காதல் தோல்வி அடையாது என்று சொல்வார்கள். ஆனால் அது இன்று பொய் ஆகி விட்டது.
ஆம்.
நான் எதையும் யோசிக்க வில்லை.
என் மண்டையில் களிமண் தான்…!
நிச்சயமாக…
உறுதியாக…
சத்தியமாக..
நான் ஒரு முட்டாள்…!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.