எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நான் ஒரு வெகுளி. அப்பாவி. மனதில் பட்டதை அப்படியே கொட்டி விடுவேன்.
நான் பல நாட்களாக உங்களுக்கு காதல் கடிதம் எழுதினேன். நீங்கள் கடிதம் கிடைத்ததற்கு ” தம்ஸ் அப் ” எமோஜியை போட்டு அசத்தினீர்கள். இதை மறக்க முடியாது. உங்கள் ஊக்கம் மற்றும் ஆதரவு என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டியது.
நானும் என் மனசில் இருப்பதை எல்லாம் கொட்டினேன். ஏன்.?
நான் உங்களை காதலிக்கிறேன். மனதார காதலிக்கிறேன். காதலை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு எல்லாமே தெரியும். நிச்சயமாக நீங்கள் என் காதலை ஏற்க தவற விட மாட்டீர்கள் என மனதார நம்புகிறேன்.
நான் அந்த நாளுக்காக ரொம்ப எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். எனக்கு உங்களை மிகவும் பிடித்து இருக்கிறது. நான் ஒளிவு மறைவு இன்றி எல்லாவற்றையும் சொல்லி விட்டேன். உங்களிடம் எதையும் மறைக்க அவசியம் இல்லை. நான் உங்களை முழு மனதுடன் காதலிக்கிறேன்.
ஆம். இது சத்தியம். நான் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
ஆனால் நான் சொல்வது உண்மை. சத்தியம்.
ஓகே…! யார் அவள்…?
ஐ லவ் யூ அரூபி…!
பை… பை.. அரூபி…!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.