காதல் பேசும் பிப்ரவரி: வா வா வா

by admin 2
27 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

ரகு. வங்கி ஒன்றில் வேலை. குடும்பம் ஊட்டியில். சென்னையில் தனி வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு அத்தை மகள் இருந்தார். பெயர் சுபா. சுபா லண்டனில் ஆராய்ச்சி முடித்து விட்டு… டபுள் பி. எச். டி பெற்று தாயகம் திரும்பினார். 

சென்னை விமான நிலையம். ரகு நிம்மதியாக இல்லை. சிறு வயதில் இருந்து சுபாஷ் நேசித்து வந்தார். இப்போது சுபா அதிகம் படித்தவர் ஆகி விட்டார். சுபா லண்டனுக்கு சென்று 5 வருடங்கள் ஆகி விட்டது.  சுபா தன்னை இப்போதும் காதலிப்பாரா…? என ஒரு விஷயம் மனதில் முள்ளாய் குத்தியது.  அவரை வரவேற்க ரகு சென்னை விமான நிலையத்தில் காத்து கொண்டு இருந்தார். அவருக்கு டென்ஷன். இதில் விமானம் 1 மணி நேரம் லேட்டாக வரும் என அறிவித்தனர். 

ரகுவிற்கு சுபா தன்னை பார்த்ததும் எப்படி நடந்து கொள்வார் என்று தெரியவில்லை. ரகுவிற்கு பதட்டம். நெஞ்சம் லப்-டப் என வேகமாக துடித்தது. இன்னும் 10 நிமிடங்களில் விமானம் வரும் என்று அறிவிக்கப்பட்டது.  தனது காதலி வருகிறார் என்று சந்தோஷம்.  விமானம் தரை இறங்கியது. விசிட்டர் ஹாலில் எழுந்து நின்று சுபாவை எதிர் பார்த்து இருந்தார். 

சுபா… ரகுவை பார்த்து விட்டார். நேரே ரகு அருகே வந்து கட்டிப்பிடித்து இச் என்று முத்தம் கொடுத்தார். ரகு குஷியில் துள்ளி குதித்தார். 

                ஆம். 

       காதலுக்கு பொறுமை  உண்டு… 

              வா…. என் அன்பே..! 

              வா…. என் அழகே…!! 

              வா…. என் உயிரே…!!! 

              வா…! வா…!! வா…!!! 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!