காதல் பேசும் பிப்ரவரி: விசித்திரக் காதல்

by admin 2
41 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

ரவி, ரமா, கீதா மூவரும் ஒரே ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்கள். கீதா தனது காதலை போன வாரமே ரவியிடம் கூறி விட்டார். 

அதற்கு ரவி ஒரு வாரம் கழித்து பதில் சொல்வதாக பதில் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து ரமா ரவியிடம் தனது காதலை சொன்னார். 

அவரிடம் ஒரு வாரம் கழித்து பதில் சொல்வதாக சொன்னார். 

டபுள் சந்தோஷம். ரவி உண்மையில் ரமா மற்றும் கீதாவை மனதார காதலித்தார். 

இரட்டை கல்யாணம் சாத்தியம் இல்லை. 

அவருக்கு இரண்டு பேரும் வேண்டும். இருவரையும் வரும் சனிக்கிழமை விஜயா மால் ஃப்புட் கோர்ட்க்கு வர சொன்னார். உண்மையில் ரவி சந்தோஷமாக தான் இருந்தார். 

ஆனால் தனது நிலையை எப்படி சொல்வது எனத் திணறினார். 

சனிக்கிழமை. விஜயா மால்.  ரவி தான் முதலில் வந்தார். 

பின்னர் ரமா மற்றும் கீதா வந்தார்கள். ரமா கீதாவை எதிர் பார்க்க வில்லை. அதேபோல் கீதா ரமாவை எதிர் பார்க்க வில்லை. 

எல்லோருக்கும் காபி ஆர்டர் செய்து விட்டு பேச ஆரம்பித்தார். 

” ரமா மற்றும் கீதா… உண்மையை சொல்லி விடுகிறேன். உண்மையில் உங்கள் இருவரையும் மனதார காதலிக்கிறேன். 

எனக்கு யாரையும் மிஸ் பண்ணும் நிலை இல்லை.  அதனால் தான் நான் இதுவரை தள்ளி போட்டேன். 

நீங்கள் இருவரும் உங்கள் காதலை சொல்லி விட்டீர்கள்.  இனி நீங்கள் இருவரும் இணைந்து ஒரு பதில் சொல்ல வேண்டும். 

ரமா மற்றும் கீதா ஐந்து நிமிடங்களில் வருகிறோம் என்று சொல்லி போனார்கள். அரை மணி நேரம் ஆனது. ரவிக்கு பதட்டம், டென்ஷன் எல்லாம் வந்தது. 

ரமா மற்றும் கீதா வந்தார்கள்.  ரமா ஆரம்பித்தார். 

” ரவி நீங்கள் உங்கள் விருப்பம் சொல்லி விட்டீர்கள். எங்களுக்கும் அப்படி தான். உங்களை மிஸ் பண்ண நாங்கள் தயாராக இல்லை…! “

” சோ… வாட்…? “

கீதா பேசினார். ” வீ வில் லிவ் டுகேதர்…! “

சரி. மூவரும் சேர்ந்து வாழட்டுமே….!!! 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!