எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
ராகவன் மற்றும் லீலா இருவரும் காதலர்கள். இவர்கள் சென்னையில் போகத இடமே இல்லை. 3 வருடங்களாக காதலித்து வந்தனர். எப்படியோ அடம் பிடித்து இருவரும் வீட்டில் அனுமதி வாங்கி விட்டார்கள். அடுத்த மாதம் கல்யாணம்.
லீலாவுக்கு ராகவன் ஒரு மொபைல் போன் பரிசு தந்து இருந்தார். அந்த போனை அவ்வளவு பிரியமாக வைத்து வந்தார். மொபைலில் அவர்கள் எடுத்து கொண்ட போட்டோக்கள் பல இருந்தன. தினமும் படுக்கும் போது அந்த படங்களை பார்த்து தான் தாங்குவார்.
இன்னும் 2 வாரங்கள். லீலா எப்போதும் போல மொபைலில் ராகவன் போட்டோக்களை பார்த்து கொண்டு இருந்தார். அவருக்கு தூக்கம் வரவில்லை. முழுக்க முழுக்க ராகவன் நினேப்பு. ராகவனை நினைத்து நினைத்து தூக்கம் இழந்தார்.
ஆம். மூன்று வருடங்களாக காத்து இருந்தார். ராகவனும் பொறுமையோடு இருந்தார். ராகவனுக்கும ஒரு பழக்கம் இருந்தது. இரவு தூங்கும் முன் லீலா படங்களை பார்த்து விட்டு தான் தூங்க போவர். இன்று என்னவோ இருவருக்கும் தூக்கம் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாட்களே இருந்தது.
ராகவன் படுக்கையில் மொபைல் எடுத்தார். லீலாவும் மொபைல் எடுத்தார். லீலா… ராகவனுக்கு ஒரு தகவல் மெசேஜ் அனுப்பினார்.
Sweet Dreams…!
ராகவனும் அதே சமயம் ஒரு மெசேஜ் லீலாவிற்கு அனுப்பினார்.
ஸ்வீட் டிரீம்ஸ்…!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.