சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: அவசரம் டூ அத்தியாவஸ்யம்

by admin
167 views

எழுத்தாளர் பெயர்: வள்ளி

ஹய்யா, அம்மா எனக்கு லீவு விட்டாச்சு, ஜாலியே.

சரிடி , கத்தாதடி. போ போய் யூனிஃபம்லா மாத்திட்டுவாடீ போட்டு தாரேன்.

ம்… சரிமா. அப்பறம் அம்மா…

என்னடி

அம்மா…, நா…, ஆஆ

இழுக்காம சொல்லவந்தத சொல்லுடி..,

அம்மா நா லீவுக்கு சித்தி வீட்டுக்கு போறேன்மா.

என்னடா இன்னும் ஆரம்பிக்கலையேனு பாத்தேன் ஆரம்பிச்சுட்டியா. இப்பதான லீவு விட்டுருக்கு ஒரு ரெண்டுநாள் போகட்டும் அப்பறமா போகலாம் சரியா.

ம் சரிமா..

இப்ப போய்விளையாடு போ.

காந்திமதி ஆறாப்பு படிக்கிறா, முருகன் மகேஷ்வரிக்கு ஒரே புள்ள. மகேஷ்வரியோட தங்கச்சி செல்லத்த பக்கத்து ஊருல தான் கட்டிகுடுத்துருக்கு.லீவுக்கு செல்லம் வீட்டுக்கு போகதான் காந்திமதி இவ்வளவு நேரம் மேகஷ்வரிக்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தா.

மகேஷ்வரி சொன்ன மாதிரிஇரண்டு நாள் முடிஞ்சதும் வழக்கம்போல காந்திமதி நொல்லைபண்ண ஆரம்பிச்சுட்டா.

அம்மா. அம்மா…..,

ஏய் படுத்தாதடி அதான் கூட்டுபோறேன். சாய்ங்காலம் வேல முடிஞ்சு வந்து அப்பா கூட்டிட்டு போறேனு சொல்லிருக்காங்க, போறதுசரி அங்கன போயி அதவாங்கி குடு,இத வாங்கி குடுனு சித்திய தொல்ல பண்ணக்கூடாது.

ம் … அதெல்லாம் பண்ணமாட்டேன்

சாய்ந்தரம் அஞ்சு மணி பஸ்க்கு முருகனும், காந்தியும்பொட்டலுக்கு போனாங்க. போறவழியொல்லாம் காந்திமதிக்கு சந்தோஷம் தாங்கல.

பொட்டல் வந்ததும் இறங்கி ரெண்டுபேரும் ஊருக்குள்ள நடக்க ஆரம்பிச்சாங்க,அடிப்படை வசதிகள் சரிவர வந்தடையா அழகிய கிராமம் அது. ஒன்றிரண்டு பொட்டிக்கடைகள்,ஒரு டீக்கடை இதை தவிர பெரியவசதிகளோ, கடைகளோ இல்லாத கிராமத்தில் என்ன தேவைனாலும் பக்கத்து கிராமம்மான வெள்ளாங்குளத்துக்கு தான் வரவேண்டும். சில நொறுக்குத்தீணிகளோடு வாங்கிவந்த பழங்களையும் செல்லம் கையில் கொடுத்துவிட்டு, நலம் விசாரித்துவிட்டு வெள்ளன வேலைக்கு போனும்னு கடைசி பஸ்க்கு ஊருக்கு கிளம்பிவிட காந்திமதிக்குத்தான் இருப்புக்கொள்ளவில்லை. ஒருவழியாக சித்தி இல்லம் அடைந்த சந்தோஷத்தில்.

இரவு உணவு முடிந்ததும் அனைவரும் படுக்க, சித்தியின் அருகே படுத்தப்படி நாளைய பொழுதை தோழிகளுடன் கழிப்பதையென்னிய படியே கண்ணயர்ந்தாள்.

காந்தி எந்திரிமா விடிஞ்சிட்டு, காபி குடிக்க வா.

ம்ம்.., இன்னும் கொஞ்சநேரம் சித்தி தூக்க தூக்கமா வருது.

நல்ல பிள்ளைலா எந்திரி கண்ணு நேரம் பாரு . காலைல சாப்ட வேண்டாமா ? அப்பறம் வயிறு என்னத்துக்கு ஆக.

சித்தி…

என் கண்ணுல, எந்திரி போய் முகத்தகழுவிட்டு வந்து காபிய குடி சித்தி உனக்கு ஆப்பமும், தேங்காய்பாலும் செஞ்சி வைக்கேன்போமா.

சரி சித்தி..
காந்தி.., காந்தி…,
யாரு.
நா கயலு வந்துருக்கேன் அத்த. காந்தி வந்துருக்கான்னு அம்மா சொன்னா அதான் விளையாட கூட்டுபோலானு வந்தேன்.

கொஞ்சம் பொரு அவ வந்துடுவா

சரிங்கத்தை..,

பகல்பொழுது விளையாட்டும் , ஆற்றங்கரை குளியலிலும்கழிந்தது.

இரவும் வந்தது வழக்கம்போல உணவுக்குபின் மச்சுக்கு உறங்க சென்றார் சித்தப்பா கண்ணாயிரம். நல்ல கண்ணய்ந்து உறங்கும் போது யாரோ எழுப்புவது போல தோன்ற கண்விழித்து பார்த்தால் செல்லம். காந்திமதி தன் சித்தியை எழுப்பிக்கொண்டு இருந்தால்.

என்னம்மா , என்னவேணும்.

சித்தி எனக்கு ஆயிவருது.

சரிவா போகலாம்.

எங்க சித்தி. நீ தானமா ஆயிவருதுன்ன வா போகலாம்.

என்ன சித்தி எங்க கூட்டுபோற . பாத்ரூம் இங்க எங்க இருக்கு.

இங்க பாத்ரூம்லா இல்லமா. அவசரத்துக்கு நாங்க ஊருக்கு ஒதுக்கு புறமாதான் போவோம்மா.

ஒதுக்குபுறம்னா , ஒன்னும் புரியல நீ சீக்கிரம் கூட்டுப்போ சித்தி எனக்கு ரொம்ப அவசரமா வருது.

சரி சரி வா போகலாம்.

இன்னும் எவ்வளவு தூரம் சித்தி போகனும்.

கொஞ்சதூரம் தான்.

அப்பள வச்சு இப்டித்தான் சொல்லுற ,ஆனா இன்னும் வரல.

இன்னும் கொஞ்சதூரம் தான்டா.வாடா என் கண்ணுலம்மா.

என்னால முடியல சித்தி.

கொஞ்சம் பொறுத்துக்கோடா..

முடியல சித்தி.

இதோவந்தாச்சு

அப்பாடி ஒருவழியாவந்துச்சே!

அப்படி மறைவா உக்காரு ..,

சரி. சித்தி.

ஏ உக்காராத எந்திரி

ஏன் , சித்தி.

யாரோ வாரமாதிரி இருக்கு கொஞ்சம் பொறு போகட்டும்.

சத்தி…,

கொஞ்சம் பொறுத்துக்கோமா..,

ம்ம்

இப்ப உக்காரு. ,

ஏன் சித்தி இப்படிராத்திரில இவ்வளவுதுரம் வந்து கஷ்டப்படுறதுக்கு சித்தப்பாக்கிட்ட சொல்லி எங்கவீட்டுல இருக்குற மாதிரிஒரு பாத்ரூம் கட்டலாம்லா

கட்டலாம் தான் , ஆனா ஏ ஒருத்திக்கு எதுக்கு வீண் செலவு ராத்திரால இப்படி ஒதுங்கி கிட்ட முடிஞ்சது அதான் கட்டலமா.

உங்களுக்காக இல்லாட்டியும் எனக்காகவாது கட்டுங்க சித்தி,இல்ல அடுத்த லீவுக்கு நா ஊருக்கு வரமாட்டேன்.

சரிடி பெரிய மனுஷி கட்டுறேன். போதுமா.

சொல்லாதிங்க செய்யுங்க.

ஏய் எந்திரி யாரோ வாராங்க

அய்யோ சித்தி

எந்திரிமா.

ம்ம்..

இப்ப இரு

ஒன்னும் வேணாம் , வா வீட்டுக்குபோவோம்.

ஏம்மா.,

பின்ன உக்காரு எந்திரினு படுத்தி எடுத்த எப்படிவரும்

சரி, வா போகலாம்.

அம்மா…ஆஆஆஆ

என்னாச்சிமா.,

காலுல ஏதோ குத்திட்டு சித்தி.

எங்க காட்டுபாக்கலாம்.

இருட்டில் என்ன என்று ஒன்னும் தெரியவில்லை. ஆனால் காலில் ரத்தம் மட்டும் நிக்கவில்லை.

சித்திவலிக்கு சித்தி.

அழாதமா, கால ஊனாம சித்திய புடிச்சுக்கிட்டு நடமா சீக்கிரம்போய்டலாம்.

முடியல சித்தி ரத்தம் ரொம்ப வருது வலிதாங்கமுடியல.

இருமா நா கட்டுபோடுறேன்.செல்லம் தன் புடவை முந்தானையை கிழித்து காலில் கட்டுப்போட்டால்,பயனேதும் இல்லை, ரத்தம் வழிந்தபடி இருந்தது.

சித்தி எனக்கு என்னமோ பண்ணுது.என்றபடியே காந்தி மயங்கிசரிந்தால்

என்னாச்சும்மா, என்னபாரு. அய்யோ எம்புள்ளைக்கு என்னாச்சோ தெரியலயே சாமி, எம்புள்ளைய நல்லபடியா வீடுகொண்டு போயி சேத்துடு உனக்கு புண்ணியமா போவும்.

யாராச்சும் வாங்களேன் என செல்லம் செய்வதரியாது கதரிஅழுதாள்.

என்னசெல்லம் இங்க நின்னு அழுகுறவ.

புள்ள அவசரம்னு சொல்லுச்சு, அதான் ஒதுங்க கூட்டுவந்தேன்.வந்த இடத்துல புள்ள காலுல ஏதோ குத்திட்டுக்குக்கா ரத்தமும் நிக்க மாட்டுக்கு, புள்ள ரத்தத்த பாத்து மயங்கிட்டுக்கா.

அடியாத்தி, சரி அழுவாத ஒன்னும் ஆவாது நீ பயப்படாத வா அளுக்கு ஒருபக்கமா புடிச்சுகிட்டு வூடு போய் சேந்துரலாம் வா.

ஒருவழியாக காந்தியை தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

அக்கா புள்ளைய செத்த பாத்துக்கோங்க, அவுக மச்சுல படுத்தாக நா போயி சத்தம் குடுத்துட்டுவாறேன்.

சரி சரி நீ போ.

ஏங்க ஏங்க..,

என்னடி ஆச்சு இப்படி ஓடிவாரவா.

ஒதுங்க போன இடத்துல புள்ள காலுல என்னமோ குத்திட்டுங்க ,புள்ளவேர ரத்தத்த பாத்து மயங்கிட்டு சீக்கிரம் வாங்க.

நீ அழாத அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ கீழ போயி சட்டையும் அப்டியே கொஞ்சம் பணத்தையும் எடுத்துட்டு வா . நா போயி மாரிய ஆட்டோ எடுத்துட்டு வர சொல்லுறேன்.

சரிங்க..,

செல்லம் வீட்டுக்குள் சென்று பணமும் , சட்டையும் எடுத்துவரவும் ஆட்டோ வரவும் சரியாக இருந்தது.

ஆட்டோ மருத்துவமனை வாசலில் நின்றது.மருத்துவரும் விரைந்து வந்து சிகிச்சை அளித்தார்.

சிறிது நேரம் கழித்து செல்லத்தையும்,அவள் கணவரையும் அழைத்து சில விவரங்களை கூறினார்.

குழந்தை காலுல நல்ல துருபிடிச்ச கம்பி குத்திருக்கு.நல்லா ஆழமாவேற போயிருக்கு.

அய்யோ.., செல்லம் பதறிதுடித்தாள்.

அழாதீங்கமா, பிள்ளைக்கு பயபடுறமாதிரி ஒன்னும் ஆகல.ஆமா கம்பி எப்படி புள்ள காலுல குத்துச்சு

அது… சற்றே தயங்கியவாரு.., ஒதுங்கபோன இடத்துல இப்படிஆகிடுச்சு டாக்டர்.

எந்த காலத்துலமா இருக்கிங்க நீங்கெல்லாம். ஒரு கழிவறை வசதி கூடவா செஞ்சிக்க மாட்டிங்க. அதான் அரசாங்கமே பணம்லா குடுக்கே அப்பறம் என்ன ஒரு கழிவறை கட்ட . உங்க ஊருல இருந்தை அடிக்கடி இப்படி கேஸ் வருது நானும் எவ்வளவோ செல்லிப்பாத்துட்டேன் நீங்கலெல்லாம் கேட்டாதானா.


இல்ல டாக்டர் . அது வந்து ..,

வந்து போயினு இழுக்காதீங்க உங்க நல்லதுக்கு சொல்லுறது உங்களுகு புரியலன என்னபன்ன. இப்பம்பாருங்க அந்த சின்ன புள்ள உங்களால கஷ்டப்படுது. காயம் கொஞ்சம் ஆழமா ஆகிருந்த என்ன பண்ண முடியும்.

உங்களலாம் மாத்த முடியாது. நல்ல துருபிடிச்ச கம்பி குத்திருக்கு ஒரு வாரத்துக்கு காலுல தண்ணி படக்கூடாது,ஒரு நாள்விட்டு ஒரு நாள் கூட்டு வாங்க புண்ணு சீல் புடிக்காம பாத்துக்கனும்.
ரத்தம் ரொம்ப போனதால புள்ள மயங்கிருக்கு, டிரிப்ஸ் போட்டுருக்கேன் முடிஞ்சதும் கூட்டுபோங்க.

சரி டாக்டர். 

சொன்னதொல்லாம் ஞாபகம் இருக்கட்டும் காலுல தண்ணி படக்கூடாது.சொல்லியவாறே அடுத்த நோயாளியை பார்க்க சொன்றார் டாக்டர்.

டாக்டர்.

என்னப்பா , எதும் மறந்துட்டியா

இல்ல, டாக்டர் அந்த பாத்ரூம் கட்ட அரசாங்கம் ஏதோ உதவி பண்ணும்னு சொன்னிங்கள்ள அதுக்கு என்ன பண்ணனும் கொஞ்சம் சொல்லுரீங்களா.

டாக்டர் கண்ணாயிரத்திடம் முழுவிவரத்தையும் கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார்.

கண்ணாயிரம் மாற்றத்துக்கான ஒரு தீர்க்கமான முடிவோடு சென்றான். கழிவறை அவசரத்துக்கான தேவையன்று அத்யாவஸ்யம் என.

முற்றும்.

அறிவவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள்  கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!