சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: மாற்றம் ஒன்றே மாறாதது

by admin
158 views

எழுத்தாளர்: கல்பனா

அதிகாலை சூரியனின் வெளிச்சம் மேலே விழுவது கூட தெரியாமல் போர்வைக்குள் மூழ்கி இருந்தான் கோவிந்தன்

டேய்… கோவிந்தா எழுந்திரு ஸ்கூலுக்கு நேரமாச்சு இப்படி போத்து போல தூங்கறையே இந்த வருடமாவது +2 பாசாகனுங்கிற எண்ணமே உனக்குத் துளிக்கூட இல்லையா?

“என்னது பொழுது விடிஞ்சிருச்சா? அய்யோ அந்த கோபால் சார நினச்சா எனக்கு இப்பவே வயித்த கலக்குதே”

ச்சீ… எழுந்திரு, உங்கக்கா நீலவேணியைப் பாத்தாச்சும் கொஞ்சமாவது படிக்க மாட்டியா?

“என்னது அக்கா மாதிரியா அப்ப எனக்கு பாவாடை தாவணி போட்டுக்க சொல்றீங்களா அம்மா”

அடக்கடவுளே,” உன்ன இந்த வயித்துல தானா பெத்தேன்.. எனக்கே இப்ப சந்தேகமா இருக்கு

“ஆமாங்க, அம்மா …உங்க புருஷன் இன்று உள்ளூரா வெளியூரா?”

“அடப்பாவி, பெத்த அப்பன அப்பான்னு கூட சொல்ல கஷ்டமா இருக்கோ”

“அடப்போங்கம்மா என்ன பொறுத்தவரை அந்த ஆள் எனக்கு யாருமே இல்லை” என்று சொல்லி குளியலறைக்கு சென்று விட்டான் கோவிந்தன்

அன்று வழக்கம் போல பள்ளியில் கோபால் சாரிடம் செமத்தியா மாட்டிக்கிறான்

“இந்த முறை உன்னை ஒன்றும் பண்ண மாட்டேன் கோவிந்தா .. உன் அப்பாவை என்ன வந்து பாக்கச் சொல்லு”

அப்பா என்கிற பேரைக் கேட்டாலே வெறித்தனமாக மாறிடும் கோவிந்தன்… அந்த ஆளா அவரெல்லாம் வரமாட்டாரு நான் வேணா எங்கம்மாவை வரச் சொல்றேன்”

அறிவியவில் ஏதேதோ திறம்பட ஒவ்வொரு பொருளை ஆக்கம் செய்யும் இவனுக்கு புத்தி இல்லாம இல்லையே ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்றே தெரியவில்லையே எதுக்கும் நானே அவங்க அப்பா கதிரேசனை நானே சந்தித்து பேசுகிறேன் நினைத்தார் ஆசிரியர்

அடுத்தநாள் மாலை பள்ளி முடிந்ததும் கதிரேசனைக் காணச் செல்கிறார் ஆசிரியர் கோபால்

“அடடே, என்ன சார் நீங்க இந்தப் பக்கம் அழைத்திருந்தா நானே வந்திருப்பேனே” – என்று கைலாசம்

“இல்ல சார் கோவிந்தனுக்கு தெரியாமல் தான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்று நடந்தவற்றை எல்லாம் சொல்ல

அய்யோ, அவன் என் புள்ளையே இல்லைங்க ஐயா, ஒன்றுக்குமே ஆகாத உதவாக்கரை அவன டி.சி கொடுத்து அனுப்பிடுங்க..அவன் என் குடும்பத்துக்கு வந்த அவமானம்”

“சார் நீங்களே இப்படி கோபப்பட்டா பிள்ளையை எப்படி சரி செய்ய முடியும்”

“அய்யோ இப்படியொரு புள்ள எனக்குத் தேவையில்லை ஐயா”

அத்தனையும் கேட்டுக் கொண்டு வாசலில் மறைந்து நிற்கிறான் பள்ளியிலிருந்து திரும்பிய கோவிந்தன்

அவன் ஆவேசத்துடன் இந்த நரக வாழ்க்கை எதற்கு என்று அந்த கணம் அங்கிருந்து வெளியேறுகிறான்

அப்படியே அன்றைய நாள் முழுக்க அலைந்து திரிகிறான் இரவு வந்ததும் அருகிலுள்ள பிள்ளையார் கோவில் மண்டபத்தில் படுத்துத் தூங்கிடறான்.

இந்த பக்கம் அம்மா கமலம் “ஏங்க பள்ளிக்கு போன மகன் பொழுது சாஞ்சும் வீடு திரும்பலைங்க, என்ன ஏது கொஞ்சம் விசாரிங்க எனக்கு கொஞ்சம் பயமா இருக்குங்க”

அடச்சீ வாயை மூடு அப்படி ஒரு பையனே இங்க இல்லைன்னு சொல்றேன், சற்று முன்னால தான அந்த கோபால் சார் வந்து கதை கதையா சொன்னாரு, அந்த உதவாக்கரை இந்த வீட்டுக்கு இனி வேணாம் போனவன் அப்படியே போகட்டும்

அடுத்த நாள் விடியலில் கோபால் என்ன செய்வதென்று நிறைய யோசித்து விட்டு கடைசியில் இரயில் நிலையம் சென்று அங்கு நின்றிருக்கும் இரயிலில் ஏறி விடுகிறான்.

இரயிலில் ஏறிய சற்று நேரத்தில் அவனுக்குள் அந்த இரயிலின் பயணத்தின் ஏதோ ஒரு தவறு ஏற்படுவதாக உணர்கிறான்

காலியாக இருந்த பயந்து பயந்து டிக்கெட் எடுக்காம ஏறிட்டேன், இந்த இரயில் எங்க போகப் போகுது என்று கூட தெரியவில்லை, கையில காசுமில்லை என்றெண்ணிய வண்ணம் இருக்கையில் அமர்கிறான்

இரயில் புறப்பட்ட சற்று நேரத்தில் அவன் இரயிலில் ஏற்படக்கூடிய மின்னதிர்வுகளில் ஏதோ மாற்றம் இருப்பதை உணர்கிறான். எழுந்து அருகில் உள்ள கம்பார்ட்மென்டை பார்க்கும் பொழுது அங்கு சீட் மேசையில் இருந்து தண்ணீர் டம்ளர் அதிர்வதை பாத்து அவனது அறிவுக் கூர்மையில் விபத்து ஏற்படுவதாக உணர்ந்து இரயில் நிற்பதற்குண்டான அவசர சங்கிலியை இழுக்கிறான் …

அப்பாடா அதே போன்று எதிர்ப்புறம் ஒரு விரைவு வண்டி நூலிழையில் அவ்விபத்தினை தடுத்து நிறுத்தினான் கோவிந்தன்..

இரண்டு இரயிலிலுமாக சுமார் ஆயிரம் பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.

அடுத்த நாள் காலை தொலைக்காட்சியிலும், செய்தித் தாளிலும் எல்லாம் கோவிந்தன் மட்டுமே நிறைந்திருந்தான்

மாற்றம் ஒன்றே மாறாதது உதவாக்கரை என்ற தந்தையால் சபிக்கப்பட்ட மகன் இன்று உலகறியக் கூடிய ஒரு அறிவியல் விபத்தை தடுத்தி நிறுத்தியுள்ளான்

இதைக் கண்டு கொண்டிருந்த கோவிந்தனின் அப்பா சுவரோரம் சாய்ந்து கொண்டு கண்ணீர்த் துளிகளுடன்!!

முற்றும்.

அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள்  கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!