எழுத்தாளர்: மு.லதா
ஆச்சு, இனிய மகளின் திருமணத்தை
விமரிசையாக நடத்தி பிரியாவும்
புகுந்த வீடு சென்று விட்டாள்.”ஏங்க
காப்பி தரட்டுமா?”என்றாள் மீனாட்சி.
சரிம்மா என்ற சிவகுமார் கனத்த மனத்துடன் மகளது அறைக்குள்
சென்று சுற்றுமுற்றும் பார்த்தார்.
அங்கிருந்த மேசை மீது அவளுக்குப்
பிடித்த இளஞ்சிவப்பு நிற நாட்குறிப்பு
அவர் கண்ணில் பட்டது.தயக்கத்துடன் அட்டையைப்பிரித்துப் பார்க்க, “அன்புள்ள
அப்பா”என்ற தண்ணீர்பட்டு அழிந்த எழுத்துக்கள்கண்ணில் படவே அதைப்பிரித்துப்
படிக்க ஆரம்பித்தார்.தேதிவாரியாக அவளின் ஏக்கங்கள்…
ஹலோ அப்பா,எப்படிப்பா இருக்க?எப்போ
வருவ?மழலை எழுத்துக்கள்…
அப்பா, எங்க ஸ்கூல்ல நடந்த மாறுவேடப் போட்டியில் நான்தாப்பா முதல்பரிசு,எவ்ளோ
பெரிய கப்பு கொடுத்தாங்க தெரியுமா?நீதான் பாக்கவே இல்ல.
அப்பா, நான் பாலன்ஸ்டு வீல் இல்லாமயே
சைக்கிள் ஓட்டறேனே!நீதான் பாக்கவே இல்ல.
இந்தாங்க. காபி, என்ற மனைவியின் குரல்
கேட்கவில்லை…..
அப்பா, உனக்குத் தெரியுமா?,நம்ம ராஷ்மி 3 குட்டி போட்ருக்காப்பா, ப்ளாக் பப்பி,ஒயிட்
ப ப்பி,மிக்ஸ் கலர்ல ஒரு பப்பி,எல்லாமே க்யூட்டா இருக்குப்பா. நீதான் பாக்கவே
இல்ல,அம்மாட்ட சொல்லுப்பா எல்லாத்தையும் நம்மளே வச்சுகலாம்பா.
என் மயிலிறகு ஏம்ப்பா குட்டியே போடமாட்டேங்குது?அம்மாட்ட கேட்டா
போடி லூஸுங்கறா,உன்ன ரொம்ப மிஸ்
பண்றேம்ப்பா.அப்பா ஃபோன்ல பேசப்பிடிக்கலப்பா,உன் தாடி குத்த உன்னக்
கட்டிண்டு பேசற மாதிரி வருமாப்)பா!
அப்பா,இந்த வாட்டி நான்தாப்பா க்ளாஸ் பர்ஸ்ட் ,சுபாஷ் செகன்ட்தான்,மிஸ்
எல்லாரையும் க்ளாப் பண்ண வச்சாங்க,வீட்டுக்கு வந்த உடனே உன்னக்கட்டிப்
பிடிச்சுக்கணும்போல இருந்துச்சுப்பா,உன்ன ரொம்ப மிஸ் பண்றேம்ப்பா…எப்பப்பா
வருவ? ரெண்டுவருஷத்ல வந்துருவேன்னு தானேப்பா போன?
அப்பா அப்பா நீ ஊருக்கு வந்துட்டு போனேல்ல, அம்மா வயத்துக்குள்ள
தம்பிப்பாப்பாவ ஒளிச்சுவச்சுட்டு போயிட்டயாம்! எங்கிட்டயாச்சும் சொல்லியிருக்கலாம்ல,போப்பா!
ஆனாலும் தாங்ஸ்ப்பா எனக்கு விளையாட ஒரு பாப்பா குடுத்ததுக்கு,
அப்பா, அம்மாக்கு பாப்பா பொறந்திருச்சுப்பா!தங்கச்சிப் பாப்பாப்பா,ரோஜாப்பூ மாதிரி
இருக்குப்பா,என் கைய கெட்டியாப் பிடிச்சுண்)டு அக்கா, அப்பா என்னப்பாக்க
எப்போ வருவாங்கன்னு கேக்கறாப்பா, எப்பப்பா வருவ?பாப்பாவ நான் பானுக்குட்டின்னுதான் கூப்பிடப்போறேன்.
அப்பா டென்த்ல நான்தாப்பா ஸ்கூல் ஃபர்ஸ்டு, காமர்ஸ் தான் படிக்கப்போறேன்,
அப்பா பிஜி முடிச்சு பாங்ல ஜாய்ன் பண்ணிட்டேன்,இப்பவாச்சும் விட்டுட்டு
வாப்பா…..பானுவோடவாச்சும் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண ட்ரை பண்ணுப்பா,
எனக்குதான் மாரேஜ் ஃபிக்ஸ் பணணிட்டீங்க.
அடக்க முடியாமல் ப்ரியா என்று பெரிதாகக் கத்திக்கொண்டே குலுங்கி குலுஙகி அழ ஆரம்பித்து விட்டார் சிவகுமார்.
ஓடி வந்த மீனாட்சி கணவனை அணணைத்துக்ககொண்டே, என்னங்க
சின்னப்பிள்ளயாட்டம்,பொம்பளப் புள்ளங்கள காலாகாலத்ல கட்டிக்கொடுக்கறது சகஜம்தானே!போய்ப்படுங்க. காலைல கிளம்பணும்ல!
இல்ல மீனா, நான் இனிமே உங்களோடதான் இருக்கப்போறேன் என்றார்.
ஏங்க நிஜமாவா சொல்றீங்க?அடியே பானு, அப்பா இனிமே நம்மகூடத்தான் இருக்கப்போறாங்களாம்.ஓடிவந்த மகளைத்தூக்கி மடியில் வைத்துக்கொண்டு
உச்சி முகர்ந்தார் சிவகுமார்..மறுநாள் அப்பா பிரியாக்காட்டேர்ந்து ஃபோன்என்று
ஓடிவந்தாள் பானு,அப்பா தாங்ஸ்ப்பா என்ற மகளின் குரல் கேட்கவே அவர்களின் விசும்பல்கள்தான் பேசிக்கொண்டது..
(வெளிநாட்டு வாழ் தந்தையர்க்கு அர்ப்பணம்)
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!