எழுத்தாளர்: காந்திமதி உலகநாதன்
அப்பாவிடம் சொல்ல. முடியாமல் போனது.சின்ன வயதில் கதைப் புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை ஊட்டியவர் என் தந்தை.பல சிறுகதைகள் தொடர்கள் பற்றி விமரிசிப்பார்கள்.இதைப் படித்துப் பாரேன்! . . என்று கிராமிய கதைகள் சமூக சிந்தனையுள்ள கதைகள் என்று பகிர்ந்ததுண்டு. மருமக்கள் வழி மான்மியம் என்று ஒரு புத்தகம், அதில் வரும் பஞ்ச கல்யாணப்பிள்ளை அவரின் குணாதிசயங்கள் அவதிகள் என்று எல்லாமே விமரிசிக்கப்பட்டிருக்கிறது.ஐந்து பெண்களைத் திருமணம் செய்தவர்.”தங்கப் பெண்ணே தாராவே !தட்டான் கண்டால் பொன் என்பான் !தராசில் வைத்து நிறு என்பான் !ஆதலால் எங்கும் போகாமல் என் கூடவே இரு! என்று ஒரு மனைவியை மட்டும் பக்கத்திலேயே வைத்துக் கொள்வாராம். தேவாரப் பாடல்களில் ‘வானாகி மண்ணாகி’ என்ற பாடல் அர்த்தம் சொல்லி சொல்லி என் மனதில் வரி விடாமல் பதிந்துள்ளது.’நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து ‘ என்ற தேவாரத்தின் விளக்கம் , எளிமையான பக்தி பற்றி சொல்லி சொல்லி மனதில் பதிந்துவிட்டது.இன்றைக்கும் அப்பாவுக்கு பிடித்த கதைகளின் தாக்கம் என் மனதில் இருக்கிறது.இன்னும் சாவி அவர்களின் ‘வாஷிங்டனில் திருமணம் ‘அப்படியே மனதில் ஓடும்.நிறைய கதாபாத்திரங்களின் உணர்வுகளை எழுத்து பூர்வமாக பார்த்ததால் பழகும் மனிதர்களின் குணாதிசயங்களை புரிந்து கொள்ள முடிகிறது.’இவ்வளவுதானா நீ! ‘என்று கடந்து போகவும் முடிகிறது.அடுத்து எப்போதும்” ஈயாத புல்லர் இருந்தென்ன! போயென்ன! எட்டி மரம் காய்த்தென்ன பழுத்தென்ன ! “என்ற சொற்றொடரை உபயோகிப்பார்கள்.அதனால் இன்றளவும் கஷ்டப்படுபவர்களுக்கு மனம் இரங்குகிறது. இயன்ற உதவிகளை செய்ய முடிகிறது.பிறந்த நாள் பரிசு கூட மறந்து போகும்! மறைந்து போகும் .இந்த பரிசு எப்போதும் என்னுடனேயே இருக்கும் என் உணர்வு_ கதை கவிதை என்று லயிக்க வைக்கும் ஆர்வம் எல்லாமே என் தந்தையிடமிருந்து வந்தது.எனக்கு ஒரு தூண்டு கோலாக இருந்து என்னை எழுத வைத்த என் தந்தைக்கு எப்போதும் என் நன்றியுடன் கூடிய வணக்கங்கள்!
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!