சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: மறுபடியும் ஒரு அப்பா

by admin 1
110 views

எழுத்தாளர்: சுஜாதா கிருஷ்ணமூர்த்தி

இதென்ன  என் அப்பா என்ன சொன்னாலும் கணவன் கிருஷ்ணா கண்டு கொள்ளவது
இல்லை ‘ எரிச்சல் மண்டியது சுஜாவுக்கு. மாமனார் சொன்னா கேக்க கூடாதா
அப்பாவை துளி கூட மதிப்பதில்லை. ஓரு நாள் வாய் விட்டே கேட்டு விட்டாள் .
கிருஷ்ணா இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை.

சுஜாவின் அப்பாவுக்கும் மாப்பிள்ளை சிறிதும் தன்னை மதிப்பதில்லை  என்று
இருக்கும் வருத்தம் உண்டு . பெண்ணை பெற்றால் இது போல் சில விஷயங்களுக்கு
வருத்தமோ கோபமோ பட கூடாது என்று சுஜாவின் அப்பாவுக்கு தெரியும். . 

நாளாக ஆக சுஜாவிற்கு இது பழகி விட்டது. ஓரு வருடம் போனதும் இதெல்லாம்
பழகி,கிருஷ்ணா செய்வது தப்பு என்று தெரிந்தும் சுஜா வருத்தப்படுவதில்லை. 
மாமனார்ன்னா என்ன ஓரு இளக்காரம் என்று சமயத்தில்  கோபம் தலைக்கேறும், .
தானாக புத்தி வரவேண்டும் என்று நினைத்து கொள்ளுபவளுக்கு காலப்போக்கில்
சரியாகும் என்று சமாதானம் சொல்வார் அப்பா

. சுஜாவிற்கும் டெலிவரி டைம் நெருங்க , சுஜாவிற்கு குழந்தையும்  பிறந்தது.  என்ன
குழந்தை என்று கேட்டு கொண்டு வந்த கிருஷ்ணாவின் குரலும், உங்களுக்கு பெண்
குழந்தை பிறந்து இருக்கிறது என்று  சொல்லும் டாக்டர் குரலும் சுஜாவிற்கு தேனாய்
இனித்த அதே நேரம், அப்பாவின் பாவமான முகமும் கிருஷ்ணாவின் முகமும் கண்
முன்னே ஓரு வினாடி வந்து போயிற்று. குழந்தையையும் அவளையும் காண,அருகில்
வந்த கிருஷ்ணாவிடம் ‘” கிருஷ்ணா நமக்கு பெண் குழந்தை” என்று சொல்லிவிட்டு
நமட்டு சிரிப்பு சிரித்தாள் சுஜா.

முற்றும்.

சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!