எழுத்தாளர்: ஹரிஹர சுப்பிரமணியன்
மாலை நேரம் , ஓய்வு பெற்று ஒய்யாரமாக வாழ்க்கையை கழிக்க எண்ணிய சுப்பிரமணிக்கு வர வர தனது மகனின் போக்கை நினைத்து நினைத்து யாரை குறை சொல்லி என்ன பயன் என்று விதியை
நொந்து கோயி ல் வாசலி ல் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்து விட்டார் ,
இந்த நிகழ்வு தினமும் நடக்க கூடிய ஒன்றுதான் .
விதியை நொந்த வாறு இருந்த சுப்பிரமணிக்கு தற்போது வயது 70 .
வர வர தனது மகன் மோகன் ஏன் தன்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதி ல்லை ,,,,,,எந்த ஒரு விஷயத்தை யும் தன்னி டம் ஆலோசிப்பதில்லை என்று யோசிக்க ஆரம்பித்து …….கோவில் கதவு பூட்ட பணியாளர் வந்த பின்புதான் நேரம் போனதையே அறியாமல் இருந்த தனது நிலையை எண்ணி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்து விட்டார் .
இரவு உணவு அருந்திய பின்பு படுக்கையில் படுத்தவாறு
தான் பணியில் இருந்த போது எப்படி எல்லாம் கௌரவமாக வாழ்ந்ததையும் ,எவரையும் சட்டை செய்யா மல் இருந்ததையும் , தற்போது ஓய்வு பெற்ற பிறகு ஒட்டு மொ த சமுதாயமே தன்னை ஒதுக்கி வைத்து வைத்து வேடிக்கை பார்ப்பதை நினை த்து மிகவும் வேதனை பட்டார்,
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து மெல்ல எழுந்து தெரு முனையி ல் இருந்த வேப்ப மரத்தை
நாடி வந்து பார்த்ததி ல் அங்கு அவரது சிநேகிதர் ராமன் சிகரெ ட் புகைத்தவாறு அமர்ந்து இருந்ததை
பார்த்து ” என்ன ராமன் , இந்த நேரத்தில் இப்படி இங்கு வந்து ,,,,,,,,,,,,,”
அதற்கு அவர் :” அட , போங்க சுப்பிரமணி , நானும் உங்களை போலத்தா ன் ,,,,,,,,உங்களுக்கு மகன் தொல்லை , எனக்கு பொண்டா ட்டி தொல்லை , ………..ஒய்வு பெற்று விட்டா லே நம்மை யாருமே கண்டுக்க மாட்டா ர்கள்
……….நாம்தான் அதற்கு ஏற்றாற்போ ல நம்மை மாற்றி கொள்ள வேண்டும் ……..உங்க வீ ட்டிலே தினமும் நடப்பதை நான் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் ….
எல்லாம் நம்ம விதி ,,,,,,,,” என்று கூறியவரை தோளில் கை போட்டு இருவரும் மீண்டும் சற்று நடக்க ஆரம்பித்தனர் . மறுதி னம் கா லை பூங்காவில் ஒருவரை ஒருவர் மீண்டும் விசாரித்து நடக்க ஆரம்பி த்தனர் .
பதவியில் இருக்கும் போது வேலையை காரணம் காட்டி குடும்பத்தை கூட கவனிக்க முடியாமல் ,
தற்போது ஒட்டு மொத்த சமூகமே தங்கள் இருவரையும் ஒதுக்கி வி ட்டதா க இருவருக்கும் ஒரு மாய எண்ணம் .இருவர் மனதிலும் எண்ண அலைகள் பின்னோக்கி ஓடியது ,,
சுப்பிரமணியனின் தந்தை இது போல ஒய்வு பெ ற்று விட்டதும் நேரம் போகாமல் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சிற்றுண்டி வி டுதியில் பணிக்கு சென்று கடைசி வரை பணிபுரி ந்து இயலாமையின்
காரணமா ய் இறுதி நாட்களை வீட்டில் கழித்ததையும் ,அவரது நண்பர் ராமனி ன் தகப்பனார் ஓய்வுக்கு பின்னர் உறவினரது துணி கடைக்கு சென்று பணி புரிந்தது எண்ண அலைகளாக இருவர் மனதிலும் ஓடியது .
இருவரும் இன்றை ய கால சூழ்நில யை நன்கு உணர்ந்து அதன் பயனாக மீண்டும் ஏதாவது நல்ல வேலை க்கு செல்ல தயாரானார்கள் .
இருவரும் எதோ சம்பளத்திற்க்காக வேலைக்கு செல்லும் எண்ணம் ஏதும் இல்லை . பொழுது போ வதற்கா கவும் மற்றும் அக்கம் பக்கத்தினரின் கேலி பேச்சுக்கு ஆளாவதை தவிர்ப்பதற்காகவும் தான் ,
இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு எல்லா இடங்களிலும் வேலை தேடி தேடி அலுத்து போய் ,,,, மரத்தடியில்
உட்கார்ந்து அவர்கள் விதி யை நொந்தவாறு இருவரும் இறுதியாக அந்த கட்டிட ஒப்பந்த காரரை பார்க்க
செல்லும்போது பெயி ண்ட் ஒப்பந்தகாரர் கண்ணில் பட்டு அவரும் இருவரது கதை தன்னை கேட்டு மறு நாள் பணிக்கு வர சொல்லி வழி அனுப்பி வைத்தார் ,
அடுத்த வாரம் வழக்கம் போல பணிக்கு சென்று எங்கு போக வேண்டும் என்று ஒப்பந்த காரரி டம் கேட்க ,
அவரோ , ” அண்ணாச்சி , ஒரு வாரம் கழித்துதான் அடுத்த வேலை , இப்போதைக்கு நீங்கள் போகலாம் “
என்று சொல்லி அலை பேசியினை எடுத்து பேச ஆரம்பித்து விட்டார் .
நண்பர்கள் இருவர் முகத்திலும் பேய் அடித்ததை போல உணர்வு .
பேசாமால் வெளியேறி நடந்து சென்று வழக்கமாய் சந்திக்கும் பூங்காவில் போய் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்து விட்டனர் .
அப்போதுதான் இரண்டு நண்பர்களுக்கும் ஒரு யோசனை மனதில் தோன்றி யது .
சுப்பிரமணியி ன் அப்பா அடிக்கடி சொல்லுவார் ,
சுய தொழில் செய்வதுதான் மிக நல்லது , எவருக்கும் அஞ்ச வேண்டாம்
நமது உழைப்பு , நமது வருமானம் ,,,,,,,
உடனே இருவரும் வேகமாக நடந்து வீ ட்டுக்கு வந்து தத்தம் குடும்ப உறுப்பி னர்களை அழை த்து பேசி
வீ ட்டுக்குள் இருந்த காலி இடத்தில் சிறியதாக காய்கறி கடை போட முடிவெடுத்து அதற்கான பணிகளை
துவங்க தயார் ஆனார்கள் .
உடனே சிறிய அளவில் ஷெட் போட்டு பக்கத்துக்கு ஊரி ல் இருந்து
கொ ஞ்சம் கொஞ்சமாக காய் கறிகளை கொள் முதல் செய்து
வியாபாரத்தில் கவனம் செலுத்தி தற்போ து இருவருக்கும் மன அமைதியும் நிம்மதியும் கிட்ட ஆரம்பி த்து விட்டது .
முயல் வெல்லும் , முயலாமை வெல்லாது
முற்றும்.
