சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: அன்பு மகள்

by admin 1
84 views

எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்

அப்பா..

என் வாழ்வில் எனது பதினோராவது வயதில் என்னை விட்டு மட்டுமல்ல இந்த உலகத்தை விட்டே பிரிந்தவர். 

அவரிடம் நான் எதையும் சொல்ல நினைத்து மறக்கவில்லை. சொல்ல வாய்ப்பு இல்லாமலேயே என் வாழ்க்கையில் போய்விட்டது. 

எனது ஞாபகம் மறதியை நினைத்து எனக்கு என் மேலேயே வெறுப்பு வருகிறது சில நேரம். இன்றைய காலங்களில் உள்ள பிள்ளைகளுக்கு அவர்கள் எல்கேஜி படிக்கும் பொழுதோ ஐந்தாவது படிக்கும் பொழுதோ அவர்கள் அப்பாவுடன் நடந்த நிகழ்வுகளை சொல்ல கேட்கும்பொழுது. 

பின்னர் தான் தோன்றும் என் அப்பாவை நான் அதிகம் பார்த்ததே இல்லை என்று. காலையில் நான் எழும் முன்னே வேலைக்குச் சென்று விடுவார், நான் உறங்கிய பிறகுதான் வீட்டிற்கு வருவார். என்றாவது ஒரு ஞாயிறு மதிய சாப்பாடு அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்ட ஞாபகம். அவர் அருகில் உட்காருந்து சாப்பிடுவதால் நன்றாக சாப்பிடும்படி கூறி எனது தட்டில் அவருக்குரிய பதார்த்தத்தை எடுத்து வைப்பாங்களாம். 

என்னுடன் சேர்ந்து எட்டு பிள்ளைகள். ஏழாவது பிள்ளை நான். பெண் பிள்ளைகளில் கடைசி  என்று என் மேல் பாசம் அதிகம் என்று பிறர் சொல்லக் கேள்வி. 

நாற்பது வருடங்களுக்கு மேல் கடந்தும், இன்றும் எனக்கு தந்தை இல்லையே என்ற ஏக்கம் ஒருபுறம் இருந்து கொண்டே இருக்கிறது. நிறைவேற ஆசையில் இதுவே முதலாவது. மறுஜென்மத்தில் நம்பிக்கை அதிகம் இல்லை. ஒருவேளை மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உங்களுக்கே மகளாகப் பிறந்து, பூமியில் இருக்கும் வரை உங்கள் பாசத்திலேயே இருக்க விரும்புகிறேன். 

அன்புடன் உங்கள் அன்பு மகள். 

முற்றும்.

சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!