சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: எனக்கு 18 வயது

by admin 1
112 views

எழுத்தாளர்: இரா .சாரதி

ஹய்யா ஜாலி! இன்று முதல் எனக்கு 18 வயது. ஓட்டு போடும் வயது. அரசாங்கத்தை  தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு.  சுதந்திரமா சிகரெட் பிடிக்கும் பாய்! யாரும்  தட்டிக் கேட்க முடியாது! தட்டிக் கேட்டால்  தழும்பாயிடும் அவன் உடம்பு .
சிக்ஸ் பேக் உடம்பு இந்த சிக்ஸ் பேஸூக்கு. இந்த ஆறுமுகத்துக்கு இனி ஏறு முகம்தான்! ஹா ஹா ஹா! வாழ்க்கையை இனி இன்ச்  பை இன்ச்சா அனுபவிக்க போறேன்!
அப்பா ஊரில் இல்லை .அதனால இன்னைக்கு ரோட்டு கடையில நானும் பிரண்ட்ஸும் சேர்ந்து தாம் தூம்னு தம் அடிக்க போறோம். ஹை ஃபை தட்டிக்கொண்டு நான் எல்லோருக்கும் சிகரெட் வாங்கி கொடுத்து என்னுடைய சிகரெட்டை பற்றவைத்தேன். நண்பன் ஹால்ஸ் கொடுக்க, ,” எனக்கு வேண்டாம்பா .என் அப்பா ஊர்ல இல்ல கவலை இல்லை.” சிகரெட்டை பிடிச்ச கையை தொங்கவிட்டு நின்றிருந்தேன். திடீரென ஒருவரின் கை என் தோள் மீது  பதிந்தது. பயந்து திரும்பி பார்த்தேன். அங்கே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் சந்தன பொட்டுடன் ஒரு நபர் . “தம்பி நீங்க அரசன்சார் பையன் தானே! ” நான் உடனே சிகரட்டை அவருக்குத் தெரியாமல்  நண்பர்களிடம் கொடுத்துவிட்டு தலையாட்டினேன் “அப்பா நல்லா இருக்காறா?வீடு இங்கதானே?” “ஆமா அவர் ஊருக்கு போயிருக்காரு” ” ஐயோ நான் பார்க்க முடியாதா?…சரிப்பா விஷயம் இதுதான். நான் அவரோட பழைய ஆபீஸ் பியூன்.   எப்பவும் பீடி குடினு இருந்தேன். அப்பாதான் அட்வைஸ் பண்ணி திருத்தி மனுஷனா கொண்டு வந்தாரு “,தன்னுடைய ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையை சுட்டி காட்டியவாறு கூறினார்.” இப்ப எனக்கு வேற ஆபீஸ்ல வேலை கிடைச்சிருச்சு.   அப்பா எனக்கு நிறைய ரூபா குடுத்து இருக்காரு. கொஞ்சம் கொஞ்சமா திரும்பி குடுத்துரலாம்ன்னு நினைக்கும் போது அவர் அட்ரஸ காணல. போன் கிடையாது. இந்தாங்க தம்பி ஐநூறு ரூபா மாசம் மாசம் நான் கொடுத்துடறேன் . அவராண்ட கொடுங்க .நீங்க அவருடைய பையன். அவரின் நேரடி வளர்ப்பு . அவரக் காட்டிலும் டபுள் குறளரசனா இருப்பீங்க . கொடுத்திருங்க”,என  ரூபாயை என்னிடம் கொடுத்தார் . பவ்யமாக மரியாதையுடன்  விடை பெற்றார். உடனே நண்பர்கள்” மச்சி செம ட்ரீட் மச்சி “என குதூகலமாகக் கூவினர். அப்பாவின் பிள்ளையான எனக்கு அவர் கொடுத்த மரியாதை உறுத்தியது. சிகரெட்டை வாங்காமல் நகர்ந்தேன் . அப்பாவின் பிள்ளையாக !


முற்றும்

சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!