தேவையான பொருட்கள்
- முட்டை – நான்கு
- கண்டன்சன் பால் – 1 கேன்
- க்ரீம் சீஸ் – தேவையான அளவு
- சோளம் – ஏழு கப் உதிரி சோளங்கள்
- கோதுமை மாவு / கேக் மாவு – தேவையான அளவு
- பேக்கிங் பவ்டர் – 1 கரண்டி
செய்முறை
- ஓவனை 325°C சூட்டில் தயார்ப்படுத்திக் கொள்ளவும்.
- பின்னர், கலப்பானில் முட்டைகள், கண்டன்சன் பால், க்ரீம் சீஸ் மற்றும் உதிரி சோளங்களை கொட்டி ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- தொடர்ந்து, அரைத்த கலவையை ஒரு பௌலில் கொட்டிடவும்.
- அடுத்து, பேக்கிங் பவ்டர் மாற்று கோதுமை / கேக் மாவை அரைத்த கலவையில் கொட்டி நன்றாக கிளறிடவும்.
- பிறகு, தட்டையான சதுர வடிவ தட்டில் சமையல் எண்ணையை லேசாக தடவிட வேண்டும்.
- தொடர்ந்து, அத்தட்டில் அரைத்த கலவையை நிரப்பிடவும்.
- அடுத்ததாக, கலவை கொண்ட தட்டை சூடான ஓவனில் வைத்திடவும்.
- ஏறக்குறைய, ஒரு மணி நேரம் ஐந்து நிமிடங்களுக்கு கேக்கை நன்றாக பேக் செய்யவும்.
- இறுதியாக, பேக் செய்த இனிப்பான சோள அனிச்சலை எவனிங் ஸ்னேக்காக பரிமாறவும்.