பழமொழி :
அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால்
பொருள்:
அயம் என்றால் குதிரை என்று பொருள்.
செயம் என்ற சொல்லுக்கு வெற்றி என்றொரு பொருள் இருந்தாலும் இதற்க்கு பூமி என்று மற்றொரு பொருள் உண்டு.
குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள நினைக்கும் ஒருவன் குதிரையின் மீது ஒரு காலையும் நிலத்தின் மீது ஒரு காலையும் வைத்து குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள முடியாது.