பஞ்சபூதங்களின் ஏப்ரல்: தீதும் நன்றும்

by admin 2
6 views

எழுதியவர்: நா.பா. மீரா

தேர்வு செய்த தலைப்பு: பஞ்சபூதங்கள் 

குழந்தைகளா, இன்னைக்கு நா உங்களுக்கு பஞ்ச பூதங்கள் பத்தி சொல்லப்போறேன் …வேணுகோபாலனின் பலத்த குரலில் ….

ஐ ..தாத்தா …பூதம் …அப்படின்னா பேய்,பிசாசு கதையா …தங்கள் வீட்டு வாசலின் வேப்பமரத்தடியில் குழுமியிருந்த குழந்தைகளின் ஆர்ப்பரிப்பை ஒரு வழியாய் அடக்கி …

பூதம்னா ..பேய் , பிசாசு மட்டும்தானா ..பஞ்சபூதம்கிறது, நீர்,நிலம்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் கண்ணுகளா. ..

பூதம்னா பயமுறுத்தறதுக்குதானே சொல்வாங்க தாத்தா …ஒரு வாண்டு கேட்க …

பூதம்னா சக்தி கண்ணா …சக்தியிலேயே நல்லதும் உண்டு …தீயதும் உண்டு. 

பஞ்சபூதங்களையே எடுத்துக்கங்களேன் ..

‘நீரின்றி அமையாது உலகு’ நீரோட முக்கியதுவத்த சொன்னாலும்.. அதே நீர் காட்டாற்று வெள்ளமா மாறினா தீமைதானே ?

நாம் நிற்க ஆதாரமாய் இருக்கும் பூமி … நடுக்கத்தால் பிளந்தால் ….

தீபத்தால் திருக்குறளைப் படிக்கலாம் ..அதே தீபத்தால் ஊரைக்கூட எரிக்கலாம்…

தென்றல் காற்று சுகமே … அதுவே சூறாவளியாக மாறினால் …

சூரியன், நட்சத்திரங்கள், நிலா , மேகம் …எண்ணிலடங்கா அதிசயங்கள்  தாங்கிய ஆகாயம் உருவாக்கும் மின்னல், இடி போன்றவை ஆபத்தானவைதானே ….

நம்மோட மிக முக்கிய தேவைகளான இவை ஐந்துமே சக்தி வாய்ந்தது.

அதுல நல்லது, தீயது பார்த்து பிரிச்சு உணரத்தான் நமக்கு ஆறறிவு கொடுத்திருக்கான் ஆண்டவன் .. புரிஞ்சுதா …

ஓ ..நல்லாப் புரிஞ்சுது தாத்தா . வேணுகோபாலின் மனைவி மஞ்சுளா சத்துமா உருண்டை கொடுக்க …

நன்றி பாட்டி …பை ..பை தாத்தா , அன்றைய கதை நேரம் முடிந்து குழந்தைகள் கிளம்பினர்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!