எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
தேர்வு செய்த தலைப்பு: நெருப்பு
“எப்ப பார்த்தாலும் உனக்கு நெருப்பில் தான் விளையாட்டு என்று குழந்தை ஸ்னேஹாவை அதட்டினாள் தாய் பூஜா..”
“பூஜா நீ சாமி ரூம் கதவை திறந்து வைக்காதே குழந்தைக்கு எப்படி தெரியும்? அது நெருப்பு தொட்டால் சுடும் என்று என்றார் தந்தை விக்னேஷ் ‘
“என்னங்க நீங்க விளக்கு ஏற்றி வைத்த உடன் சாமி ரூம் கதவை சாத்தக்கூ டாது என்று அம்மா சொல்வாங்க அது வீட்டுக்கு ஆகாதாம் என்றாள் பூஜா..”
“ஓஹோ அப்படியா சங்கதி? உன் மூட நம்பிக்கைய தூக்கி உடப்பில் போடு இந்த காலத்தில் கூட பழைய பஞ்சாங்கம் சொல்லிக்கிட்டு இருக்கே?
என்று கோபம் கொப்பளிக்க கணவர் விக்னேஷ் சொல்ல..”
“பூஜா பேசாமல் சமையல் கட்டுக்கு சென்று வேலையை தொடர்ந்தாள்”
“மறுநாள் அதே போல விளக்கேற்ற மூன்று வயதே ஆன குழந்தை ஸ்னேஹா விளக்கு ஏற்றி வைத்ததை பார்க்க..
“பூஜாவின் கை பேசி ஒலிக்க குழந்தையை கவனிக்காமல் கைபேசி எடுத்துப்பேச ..
“குழந்தை நெருப்பில் கை வைக்க சுட்டு விட ..
“குழந்தை அழும் சத்தம் கேட்க பூஜா ஓடிச்சென்று குழந்தையை தூக்கி கட்டி
அணைத்தபடியே நெருப்பு சுட்டு விட்டதே என்று புலம்ப..
“தனது அலட்சியம் உணர்ந்தாள்!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.