எழுதியவர்: உஷாமுத்துராமன்
தேர்வு செய்த தலைப்பு: நீர்
பல வருடம் அடுக்குமாடி கட்டடத்திலேயே வாழ்ந்து விட்ட நந்தினிக்கு தனி வீட்டில் வாழ வேண்டும் என்ற அவளுடைய ஆசையை அவள் கணவன் சிவா பூர்த்தி செய்தான்.
ஒதுக்குப்புறமாக இருந்தாலும் நல்ல அருமையான நிலம் வாங்கி அழகாக வாஸ்துபடி வீடு கட்டினான். அதில் இரு புறமும் பெரிய பைப் போட்டு அதிலிருந்து விழும் மழை நீரை சேகரிக்க ஒரு தொட்டியும் கட்டி விட்டான்.
இதனால் நந்தினிக்கு மழை வந்தாலே கொண்டாட்டம்தான் அதில் நல்லதொரு சுத்தமான நீர் நிறைந்து விடும் என்பதால் அவளுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது.இது தவிர அவள் வீட்டில் கிணறு வேண்டும் எள்றாள். “இந்த காலத்தில் யார் கிணறு வைக்கிறார்கள்?’ என்று கேட்டதற்கு “இல்லை எனக்கு வேண்டும்” என்று பிடிவாதமாக ஒரு கிணற்றையும் வைத்துக் கொண்டாள்.வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து விட்டாலே நந்தினிக்கு கொண்டாட்டம்தான். எப்போது மழை பெய்யும் என்று பார்த்துக் கொண்டே இருப்பாள்.
இடியுடன் பெய்யும் மழையினால் அவளுடைய வீட்டில் கிணற்றிலும் அவள் கட்டியிருக்கும் மழை நீர் சேகரிப்பு தொட்டியிலும் மழை நீர் நிறைந்து விடுவதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
எப்போது கருமேகம் பார்த்தாலும் கொண்டாட்டத்துடன் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பாள். தடதடவென்று அதில் விழும் மழைநீர் ஓசை அவளுக்கு ஒரு கச்சேரி போலவே இருக்கும் என்பதால் மிகவும் ரசித்துப் பார்ப்பாள்.
மழையை ரசிக்கும் இந்த குழந்தைத்தனமான நந்தினியை பார்க்கும்போது சிவாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதற்காகவே எப்பொழுதும் மழை வர வேண்டும் என்று வருண பகவானை இருவரும் வேண்டிக் கொள்வர்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.