படம் பார்த்து கவி:காது குடைப்பான்/ துடைப்பான்

by admin 3
59 views

காது மதிப்பிற்குரிய ஓர் உறுப்பு!
நல்லவற்றை கேட்கவே படைக்கப்பட்ட ஓர் படைப்பு!
சிப்பிக்குள் கழிவு புகுந்தால் முத்து!
காதுக்குள் கழிவு சேர்ந்தால் நோவு!
காது குடைப்பான்
அதற்கு ஓர் தீர்வு!
குடைய குடைய சுகமே!
என்னவள் கை செய்யும் மாயமும்!
குடைப்பானின்
பஞ்சு நீரை உறிஞ்ச கிடைக்கும் சுகமும்!
அளவில் சிறியவன் நீ!
செய்யும் வேளையிலே
பெரியவன் நீ!
ஆதி கால இறகிலிருந்து,
காது துடைப்பான் வரை பரிணாம வளர்ச்சி
செயல் ஒன்றே
துடைத்தல், துடைத்தல்….

சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!