கார்மேக இருளில் வெண்ணிலவு இளநகை பூச,
செவ்வானத்தின் சிவப்பும் அதனுடன் பொலிந்து மிளிர,
பறவைக்கூட்டங்கள் தங்கள் வீடுகளை நோக்கி விரைய,
அலையோர மணலில், காலப் பட்டுப்போனதோர் மரம்,
தன் தோளில் ராந்தல் விளக்கைச் சுமந்து,
இருண்ட பாதைக்கு ஒளிகாட்டி,
பயணிகளுக்கு நிழலாய், துணையாய் நின்று,
இயற்கை வரையும் உயிரோவியம் இதுவே!
திவ்யாஸ்ரீதர் 🖋
