அடுத்தவனின் உழைப்பை அசிங்கபடுத்தாவன்
என்னில் அமர ஆசை
சத்தியத்தை மீறாதவன் என்னில்
உட்கார ஆசை
சிறந்த கல்வியை
வழங்குபவன்
என்னை ஆட்கொள்ள ஆசை
கள்ளசாரயம் எனும்
விஷத்தை காச்சாதவன்
என் மீது அமர ஆசை
ஆனால் எனக்கு தெறியும்
இது நிராசையே
மாறாக எனக்கு கிடைக்கும் பூசையே
பணத்திற்கும்
இலவசத்திற்கும்
அடிமை பட்டு இருக்கும்
எமது திரு நாட்டில்
நேர்மையை எதிர்பார்ப்பது
எவ்வித நியாயமும்
இல்லையே
மக்களே நீங்கள் மாறினால் முடியும்
எனது எதிர்காலம்
நல்லதாக அமைய
தனது குடும்ப நலனை பாராது
மது எனும் விஷத்தால் பல
தாலிகளை அறுக்காது
மனித நேயமிக்க
தலைவனை என்மீது
அமரவைத்தால்
ஆனால் இது எங்கே
நடக்க போகுது
உங்கள் அறிவு எனும்
கண் இருட்டில்
அடைபட்டு அல்லவா
கிடக்கிறது
நான் மட்டும்
ஆசை பட்டு
என்ன ஆக போகிறது
இறைவா
இவ் மானிட பதர்களின்
அறிவு எனும்
கண்களை திறந்து விடு
என் ஆசையை நிறை வேற்றிவிடு..,.
M. W. Kandeepan🙏🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)