அன்ன நடை அழகெனச் சொல்லி உன் நடை அழகை கை விட்டது கவிதை உலகு…
உனக்கென்ன கோவம் கோவித் துக் கொண்டே நடக்கிறாய் ஓட்டமும் நடையுமாக…
ஆயிரம் முறை சரிபார்த்து உடையணியும் உலகில் பிறப்பிலேயே சரியான உடையாய் அமைந்த உடல் கொண்டு கவர்ந்து இழுக்கிறாய்…
உனக்குள்ளும் காதலுண்டா ஒற்றைக் காதலாம்…உனக்குள்ளும் கோவமுண்டா பிரிந்திடுவாயாம்…
நாலு கிளிஞ்சல்கள், இன்ன பிற சங்குகள், கண்டு ரசித்திட சில மீன்கள், ஊடலும் காதலும் கொண்டிட கடற்கரை, வாழ்ந்திட உணவும், இருந்திட கடலென வாழ்க்கை போதுமா இந்த வரதட்சனை 90s…
கங்காதரன்