அம்மா இது என்ன? பந்து கண்ணா! பூங்காவில் ஓடி ஆடிய சிட்டுக்கள் தவறவிட்டு வண்ணநிலவன் அவன் கையில் …….. எப்படி இருக்கும்…… தடவி உணர்ந்து …….. அய்….. வட்டம்….., அம்மா….. இதன் நிறம்…? நேற்று வானவில் வண்ணங்கள் சொன்னேனே…. ஞாபகம் வருகிறதா நிலவா! கற்பனைச் சிறகுகள் விரிய…… தாயின் விழிகள் வழியே…,.. வர்ணங்கள் உணர்ந்து குதூகலம் காட்டும் ……. விழிப்பாவைகள் காணா…… வண்ணநிலவன் அவன் முகம் !
நாபா.மீரா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)