அரசியல கட்சியில்
தலைமை இழந்தது
பிளவு வந்தது
மூவர் அமரும்
நான்கு காலி
நடுவில் வந்தது
தீர்மானம் அரங்கேற
சபைக்கு வந்தது
முதல் இருக்கை
கண்களை மூடிக்கொண்டது
நடு இருக்கை
வாயை பொத்திக்கொண்டது
கடைசி இருக்கை
செவி அடைத்துக் கொண்டது
தொண்டனுக்கு இப்போது
புரிந்தது
இது தலைமை பீடமல்ல
காந்தி குரங்குகளின்
இருக்கை என்று
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
