அல்லிக் குளத்தருகே, ஆசையுடன்
காத்துநின்றேன்!
வெள்ளி முளைக்கையிலே
வருவேன் என்றுரைத்தாயே!
கள்ளி நீயும் வந்துவிட்டால்
பள்ளிப்பாடம் வாசிப்போம்!
காதலையே யாசிப்போம்
காத்துநிற்கும் தோணியேறி
காடுகரை பயணிப்போம்!
கட்டுக்காவல் ஏதுமில்லை.. உன்
சுட்டும்விழிப் பார்வையிலே
மட்டில்லா ஆசை கொண்டேன்!
பட்டுக்கூந்தல் பாய்விரிக்கக்
கூடு விட்டுக் கூடு பாயும் புது
வித்தை நாமும் கற்போம்!
நட்டநடு நிசி முதல் நான்
பட்ட பாடு நீ அறியாய்!
வட்டப் பொட்டுக்காரி
எட்டாக் கனியாக எங்கு
ஓடி ஒளிந்து கொண்டாய்?
தீராது என் காதல் எந்நாளும்
பாராமுகம் ஏனடியோ?
வாராது பொய்க்கும் மாமழைபோல்
உனைச் சேராது நானும் போவேனோ!
வான் நிலவத் தூது விட்டேன்
தேன்கனியே தீஞ்சுவையே!
மான்விழியே மயிலினமே
மறக்காமல் வந்துவிடு!.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
