இது இயற்கை குளியல்
இரு புறமும் வாழை சூழ
தெளிந்த நீரோடை
நடுவே நடைபாதை
பாதை மீது விரிப்பை
மீறி வழியும் நீர்
அவள் ஆசை மகனை
குளிக்கும் தொட்டியில்
நிற்க வைத்துக்
குளிப்பாட்டுகிறாள்
சோப்பு நுரைகள்
நீர்க்குமிழிகளாக
வானவில்லாக
வண்ணத்தில்
மிதக்கின்றன
வெள்ளைச் சிரிப்பில்
அவள் சூடிய மல்லியும் மயங்குகிறதே.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
