உன்னை அழகு படுத்தாமல் உன்னால் அழகு.பெறுகின்றன
நீ அணிந்த கொலுசுகள்…
ஓவியத்தின் மீது பட்ட அழகிய தூரிகையாய் சில வளைவுகள் உன் புருவங்களை விடவா…
உன் பாதம் பட்ட பரவசத்தில் வெட்கப்பட்ட மருதாணி சிவப்பு…
உன் கால் தடம் பட்டதால் உயிர் பெறும் நான்… என்னுடன் காதல்…
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
