ஆழிசூழ் உலகின் அற்புதமே!
ஆதியோடு அந்தமாய் பரந்த
விசும்பின் அழகு விண்மீன்கள்!
கண்களுக்கு விருந்தாகும்
விண்மீனைத் தொடமுடியாதென்றோ
உன்னை……..
ஆழியில் படைத்துவிட்டான்
ஆண்டவன்!.
அலைகடல் மண்டலம் முதல்
ஆழ்கடல் மண்டலம் வரை
பரவிக் கிடக்கும் அழகான
விண்மீன் உயிரியே!
உன்னில்தான் எத்துனை
வண்ணங்கள்….வடிவங்கள்!
மெல்லுடலிகளை உணவாய்
உண்டு…..
மெதுவே நகர்ந்து எங்கே செல்கிறாய்?
ஆரவாரம் இன்றி அமைதியாய்
நீ இருந்தாலும்…..
ஆசை மிருகங்கள் உன்னையும்
விட்டுவைக்காது….
காண்பவை யாவும் தனக்கே
என்ற உயரிய குறிக்கோள்
கொண்ட மனித விலங்கிடம்
மாட்டி மரணிக்காதே.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
