- ஆழ்கடல் அதிசயம் *
கைகளுக்கு எட்டா அந்தி வான் நட்சத்திரங்களை போன்று,
கண்களில் அபூர்வமாய் காணும்
ஆழ்கடல் நட்சத்திர அதிசயம் நீ,;!
மித மிஞ்சிய மீன்களில் நீச்சல்
அறியாமல் நீருக்குள் வாழும்
அதிசயம் நீ,!
உடலில் உதிரம் இன்றி சிவந்த
தேகத்தில் பிறந்த அதிசயம் நீ,!
உனை வியந்து பார்க்கும் விழிகள்
வின்மீன் என பெயர் சூட்டி அழகு
பார்க்கும் அதிசயம் நீ,!
தரையோடு தரையாக
கண்ணாடி பேழை போல்
தண்ணீருக்கு அடியில் வாழும்
கடல் அன்னையின்
அறுங்கோண அதிசயம் நீ,!
உலகின் அதிசயங்கள்
யாவும் உனை வந்து பார்த்திருந்தால்
தலை குனிந்திருக்கும்
பேரதிசயம் நீ என்று….!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
