இச்சை மூட்டும் பச்சை பூவே
புற்றுநோய்க்கு இம்சை நீயே
தாது சத்து தாராளம் உனக்கு
எடையை குறைக்க நார்சத்து
நாற்புறமும் நிறைந்திருக்கு
நீ பூவா காயா என்று
புலப்படவில்லை எனக்கு
வெயிலுமில்லாத குளிருமில்லாத
மிதமான காலநிலையில்
உனக்கு உறைவிடமிருக்கு
உருண்டு ஓடும் காலச்சூழலில்
உன் தேவை அதிகமிருக்கு
தேவைக்கு சேவை செய்ய
பாலையிலும் பூப்பூக்க
மனமிருக்கா உனக்கு!
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
