பிளவுப்பட்ட சாலையை
கற்கள் மண் கொண்டு
மூடிடலாம்…
ஆனால்..,
அதன் பழைய சமதளத்தை
பெற முடியாதே…
சாலை பிளவுபட காரணம்
அதன் அடித்தளம்
சரியாக அமைக்கபடவில்லை
என்பதே…
இயற்கையோ சுற்றியுள்ள
சூழலோ காரணமாகாது…
அது போலதான்
உன் அன்பும்..,
உன்னை உண்மையாக நேசித்தேன்..
அன்பின் அடிப்படையே
உண்மையும் காதலும் தானே…
காதல் வந்தால்
பின்னே பிளவும்
வருனேன்று ஒளிந்து கொள்கிறதே…
என் செய்வேன்…?
பிளவு வந்த பின்னும்
உன் நினைவுகள்
எனை சுற்றியே
மின்மினியாய் ஒளிர்கிறதடா…
சுற்றியுள்ள உறவுகளையோ
சூழலையோ காரணமாகச்
சொல்லாதே…
பிளவு நேர்ந்த பின்னும்
நேசம் இன்னும்
மிச்சம் இருப்பின்
அந்த நேசமே
நம்மை இணைக்கும்…
ஆனால்..,
முந்தைய அன்புடன்
மீண்டும் ‘நேசிக்க முடியுமா?’
என்றால் நிச்சயம் இல்லை
என்றே சொல்வேன்…
காயம்பட்ட இதயத்தில்
வழிவது கண்ணீரல்ல..,
உன் வார்த்தை கொடுத்த
வலியின் குருதி…
வலி குறையும்..
ஒருபோதும் மறைந்திடாது…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)