இந்த நங்கையின்
வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலளோ!
செந்தூரக் குழம்பில் தோய்ந்த
அழகிய பாதம்,
முத்துக்களும்,வெண் கற்களும்
பதித்த அழகிய கொலுசு!
பாதமே இத்துணை அழகென்றால்
இவள் வானின்று இறங்கி வந்த தேவதையோ?
ரசிக்க மட்டுமே இந்தப் பாதமெனில்
வாழ்க்கை முழுமைக்கும் இது
சாத்தியமா?
எதுவுமே நிரந்தரமில்லா
நிலையற்ற வாழ்க்கையில்,
மாற்றம் ஒன்றே மாறாதது!
இன்றைய உன் அழகிய பாதம்
பயணிக்க வேண்டிய பாதையோ
வெகுதூரம்……..அதில்
பூக்களும் இருக்கலாம்……ஏன
முட்களும் இருக்கலாம்!
உழைத்து வியர்வையால்
அலங்கரிக்கப்பட்ட பாதத்துடன்
சரித்திரம் படைக்க எழுந்து வா,
என் சிங்கப்பெண்ணே!
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
