இராஜாராமா!
சதியை ஒழித்ததாக
சதி செய்து விட்டாயா?
உடன் கட்டை ஏறி விட்டதா?
இல்லை சிதைக்கும்
விறகாய் மாறிவிட்டதா?
கற்பை நிருபிக்க
தீக்குளிக்கிறதா?
ஐயகோ!
ஏது செய்ய
எதுவானாலும்
பரவாயில்லை
நாக்கு நம நம என்கிறது
கருகும் முன்பு
கையில எடுக்க வேண்டும்
தீராத மோகம் நீ
திகட்டாத அமுதம் நீ
வாழும் போது சொர்க்கம் நீ
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)