இறையான இறைச்சி
அக்னி சிகரம் போல்,
இரும்பு கம்பியின் மேலே
உன் உயிரை பறித்த பின்னும்
விடாது நெருப்புக்கு
இறையாக்கி விருந்துக்கு
காட்சி படுத்தும்
உன் உயிரை
பறித்தது யாரோ,
உலகில் ஒரு உயிரான உனை
உன்னில் ஒரு அங்கமான
உன் இடையை பிரித்தெடுத்து
வருத்தெடுத்து விட்டனரோ
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
