இளமையாய் இருக்கும்போது இருக்கும் மரியாதை.
சற்றே கந்தலானால்
கரை சேரமிடம்
தெரியாது.
அமரும் மனிதர்களின் ஆக்கிரமிப்புகளில் அறிந்திடலாம் அவரவர்
அந்தஸ்தை.
தவணை தொகையில் தருவித்து தன் பெருமை காட்டுவோரும் உண்டு.
தக்க தடிமனோடு
தகைசால் அறையில் காட்டி மிரட்டுவோருமுண்டு.
பகட்டு வாழ்க்கையின் பகுதியாகிவிட்ட பஞ்சனை. ஏதுமில்லாதவர்க்கு பார்க்கும்போது ஏற்படும் வஞ்சனை.
-அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)