உடுமீன்
ஐம்பூதங்களில் விசும்புக்கு மட்டும் இறைவன் விண்மீன் கொடுக்க… ஆர்கழியும் தனக்கும் ஒரு உடுமீன் வேண்டும் என்று ஆரவாரம் செய்ய
இறைவன் அளித்த அற்புதமே நீ…
ஐங்கோண வடிவழகே…
ஆர்கழியின் விசித்திரமே…
நடப்பதற்கு மயிரிழையில் கால்களையும்
பாதுகாப்பிற்கு ஐம் புயங்களையும்
தன்னகத்தே கொண்ட நீ
வாயினையும் வயிற்றினையும் எங்கோ ஒழித்து வைத்தாயே…
வீண் மீனும் கண்டு வியக்கும் உடுமீனே உன் அழகை இரசிக்காத மானூடன் ஏனோ உன்னை புசிக்க மட்டும் எண்ணுகின்றானே… - ரஞ்சன் ரனுஜா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)