உனக்காக உன் அண்ணனிடம் நான் வாங்கிய அடிகளில்
நொறுங்கிய எலும்புகளை கூட வலுப்பெறச் செய்தது ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி சாப்பிட்டதாலோ என்னவோ புற்றாய் அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகளில் நான் நிம்மதியாய் வாழ முடிகிறது
இருந்தும் எனக்கு பதில் சொல்லாமல்
தவிக்க விடுகிறாயேடி பெண்ணே
உன்னையே தாங்கும் என் இதயத்திற்கு தெம்பாக இருக்க
தினமும் தேடித்தேடி உண்கிறேன் ப்ரோக்கோலியை
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
