உன்னை எதிர் பார்த்து காத்து
இருப்பவர்களுக்கு நீ வரம் அளிப்பது இல்லை…
உன்னை வேண்டாம் என நினைப்போரிடம் நீ கை சேருகிறாய்…
உன்னை முகம் காண தவம் இருந்து மலடி என்னும் பட்டத்தை சுமந்து வாழ்பவரிடம் நீ கை சேர்ந்து விடு…
உன்னை அவள் பொக்கிஷமாக தன்னுள் வைத்து பாதுகாத்து கொள்வாள்…
இல்லை என்றால் குப்பை தொட்டிகள் தான் உன்னை ஈன்று உள்ளதாக மக்கள் நினைத்து விடுவார்கள்….
வலி கொடுக்கும் காயமும் நீ வலி தீர்க்கும் மருந்தும் நீயே !
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
