உன் கால் பிடித்தேன்
உன்னுடன் கலக்க வேண்டி
உன் கால் பிடித்தேன்
என்னுடன் கலந்த பின்னும்
உன் கால் பிடித்தேன்
உன்மத்தம் ஆகினேன்
உன் கால் பிடித்தேன்
என் உயிர் சுமக்கும்
உன் கால் பிடித்தேன்
ஈரைந்து திங்களும்
உன் கால் பிடித்தேன்
சுகமாய் பிரசிவித்தாய்
உன் கால் பிடித்தேன்
பிள்ளைகள் வளர
உன் கால் பிடித்தேன்
பொறுப்புகள் வந்தது
உன் கால் பிடித்தேன்
வளர்ந்து உயர்ந்தேன்
உன் கால் பிடித்தேன்
கடமைகள் முடிந்தது
உன் கால் பிடித்தேன்
இனி மரணிக்கும் வரை
உன் கால் பிடிப்பேன்..
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)