- உயிரூட்டும் நினைவு *
வாழ்க்கை புத்தகத்தில்
திரும்ப திரும்ப பார்க்க
தூண்டும் பக்கங்களை
நிறப்புவது நீ கண் சிமிட்டும்
ஒரு நொடியில் உறவுகளை
ஒன்றாக்கி எடுத்த நகலேடு;!
வாழ்க்கை ஒர் அழகான
ஒரு வழி பாதை பயணம்
பயணிக்கும் காலங்கள்
நிற்னயிக்க முடியாது என்றாளும்
மனதில் பதிந்த முகங்களை
பல தலைமுறைகளுக்கு
எடுத்து செல்ல
உன் சிறு கண் சிமிட்டல்
போதும்;!
பலரின் பொக்கிஷ
பெட்டகங்களுக்கு கிடைத்த
வரப்பிரசாதம் நீ…!!
இறந்த காலத்தை உயிருட்டும்
உனை போற்றி பாட
வார்த்தைகள் இல்லை;!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
