தெருவோரக் குப்பைக் குழி
மெலிந்த மேனியோடு
காத்துக்கிடக்கிறது தெருநாய்!
பொத்தென விழுந்தது பொட்டலம்
பேய்த்தாவலில் பாய்ந்த நாய்
ஓசையின்றி பின்வாங்குகிறது!
ஒடிந்த தேகத்தோடு
ஓடிவரும் முதியவரைக் கண்டு!
புனிதா பார்த்திபன்
தெருவோரக் குப்பைக் குழி
மெலிந்த மேனியோடு
காத்துக்கிடக்கிறது தெருநாய்!
பொத்தென விழுந்தது பொட்டலம்
பேய்த்தாவலில் பாய்ந்த நாய்
ஓசையின்றி பின்வாங்குகிறது!
ஒடிந்த தேகத்தோடு
ஓடிவரும் முதியவரைக் கண்டு!
புனிதா பார்த்திபன்