பாரதி இருந்திருந்தால்
கொத்தித் திரியுமந்தக் கோழி
அதைக் குருமா செய்யாதே பாப்பா
பாலை பொழிந்து தரும் பசு
நெல்லு வயலில் உழுது வரும் மாடு
இவைகளை அடித்து
புசிக்கலாமா பாப்பா
வண்டி இழுக்கும் நல்ல குதிரை ஓடவிட்டு பந்தயம் கட்டலாமா
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு
அதை அறுத்து உண்ணாதே பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்
கடித்தால் நான்கு ஊசி போட வேண்டும் பாப்பா என பாடியிருப்பாரோ.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
