எத்துனை நேரம்
ஓடியிருக்கும் கையில்
சிக்காமல்
தன் உயிரை காப்பதற்காக
மேல் மூச்சுவிட்டு
கீழ் மூச்சு வாங்குவதற்குள்
தலை திருகி
நெருப்பில் வாட்டி
இதோ வெந்து கொண்டு
இருக்கிறது காரசாரமாக
கடிக்க ஏதுவாக சதைப்பகுதி மட்டும்
கோழி வெட்டியவன்
கைகளில் சிறிதாய்
ஒரு காயம் அப்போதும்
கோழியின் வலியை உணரவில்லை
ருசித்து புசித்து கடித்து
சாப்பிடவே காத்திருக்கும் ஒரு கூடடம்.
அமிர்தம் ரமேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
