உன் விரல் நீளம் சொல்லுதடி
நீ சராசரிக்கும் உயரம் என்று!
உன் விரல் வனப்பு உரைக்குதடி
நீ உன் வீட்டின் இளவரசி என்று!
உன் நகப்பூச்சு செப்புதடி
உன் வீட்டின் வளமையை!
உன் விரல் மோதிரங்கள் விளிக்குதடி
நீ உன் வீட்டின் வைரம் என்று!
என்றும்
நீ இதே
போல இருக்க வேண்டுமானால்
உன் உற்றவனாக
நான் இருக்கவேண்டும்
என்றென்றும்….
இப்படிக்கு
சுஜாதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
