ஒரு ஹந்திரி தினத்தில் தானடி
உனை பார்த்தேன்
பார்த்த நொடியிலேயே
தந்தூரி சிக்கனாய்
வெந்து போனேன்
இரவு வரும் கனவுகளில் எல்லாம்
உன் தொல்லை தானடி
ஒரு தயிர் சாதத்தை
தலப்பா கட்டு பிரியாணியாய்
மாற்றி சென்றதில்
மோகினியின் பங்கும் உண்டு
யாமறிந்த செயல்களிலேயே
காதலை போல்
இனிதாவ தெங்குங் காணோம்!
-லி.நௌஷாத் கான்