கண்ணே கண்ணாளனே
உடலின் நரம்பெல்லாம்
பாதத்தில் முடியுதே
பாதத்தை வருடுகிறாய்
தேகம் துடிக்குதட
காமத்தின் முடிச்சு
எங்கெங்கு இருக்கு
முத்தத்தால் முடிச்சு
அவிழ்க்க யுத்தம் நடத்து
அடி முடியில் தொடங்கு
அடி முதல் முடிவரை ஆட்படுத்து
மலர்களின் கூட்டம் என் தேகம்
என் பாதக்கமலம் உன் சிரசில் ஏற்று
தாமரை தலை தாங்கிய பிரம்மனாய்
உயிர் உருவாகும் வேள்வி நடத்து
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
